மருத்துவம், கணினி, பொறியியல்... புதிய படிப்பு!

மருத்துவம், கணினி, பொறியியல்... புதிய படிப்பு!

மருத்துவப் படிப்புக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. புதிய நோய்கள் வருவதும், புதிய மருந்துகள் வருவதும், புதிய தொழில்நுட்பங்கள் வளர்வதும் மருத்துவ உலகின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.


மருத்துவப் படிப்புக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. புதிய நோய்கள் வருவதும், புதிய மருந்துகள் வருவதும், புதிய தொழில்நுட்பங்கள் வளர்வதும் மருத்துவ உலகின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன. மருத்துவத்துறையில் அறுவைச் சிகிச்சைகள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

தொடக்கத்தில் எக்ஸ்ரே பின்னர் ஸ்கேன், தற்போது சி டி ஸ்கேன் என பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 
உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய தொழில் நுட்பங்களை வளர்ப்பது, கண்டுபிடிப்பது அதிகரித்து வருகிறது. மருத்துவ உபகரணங்களுக்கான  ஆய்வும், தேவையும் உள்ளது. 

மருத்துவத்துறை என்பது தனிப்பட்ட துறையாக இருந்தாலும், அது கணினித் தொழில்நுட்பம், பல்வேறு பொறியியல்துறைகள் எல்லாவற்றையும் சார்ந்ததாக மாறிவிட்டிருக்கிறது. 

மருத்துவம் சார்ந்த தொழிலுக்கு தேவையான துணை மருத்துவப்படிப்புகள் பல இருந்தாலும், உபகரணங்கள், தயாரிக்கத் தேவையான தொழில் நுட்ப அறிவு, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்குஅகில இந்திய தொழில்நுட்பக்கழகம் தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் மெடிக்கல் என்ஜினியரிங் என்ற 4 ஆண்டு இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்கள் படித்துமுடித்து வேலைக்குச் செல்வதைக் காட்டிலும் சுய தொழில் செய்வதற்கு இந்தப் படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் படிப்பு தமிழகத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்லூரிகளில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியும் ஒன்றாகும். இந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் மெடிக்கல் என்ஜினியரிங் பட்டப்படிப்பு குறித்து அக்கல்லூரி தாளாளர் ஆர்.சோலைச்சாமி நம்மிடம் பகிந்து கொண்டதாவது:

கணினி அறிவியல் படிப்புடன் தொடர்புடையது இந்த படிப்பாகும். நவீன மருத்துவத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணங்கள் தேவை. சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றைக் கையாளவும், அவற்றின் தொழில் நுட்பம் குறித்து தெரிந்து கொள்ளவும் இந்த படிப்பு உதவுகிறது.சமீப காலமாக உலகநாடுகளை கரோனா தொற்றுநோய் அச்சுறுத்தி வருகிறது. இதுபோன்ற பல தொற்றுநோய்கள், மேலும் உள்ள பல நோய்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து இந்த படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நவீன மின்னணு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்து கணினி மூலம் மற்றும் புதிய மென்பொருள்கள் மூலம் ஆய்வு செய்து,நோய் தொடர்பான தாக்கம், அதற்கு எந்த வகையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த படிப்பு இது. இந்தத்துறையில் படித்து முடிக்கும் மாணவர்கள், இனி வருங்காலங்களில் மருத்துவத்துறையில் சவாலான சிகிச்சைகளுக்குத் தேவையானஆய்வுகள், சிகிச்சை முறைகள் தொடர்பான உபயோகமான தொழில் நுட்பங்களை மருத்துவ உலகிற்கு அளிக்க இயலும். பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர தகுதியானவர்கள். இதற்கான மாதிரி பாடத்திட்டங்களை அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் எங்களுக்கு வழங்கியுள்ளது. எங்கள் கல்லூரி தன்னாட்சி கல்லூரி ஆகையால் அந்த மாதிரி பாடத்திட்டங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எங்கள் கல்லூரி பேராசிரியர்கள் இந்த படிப்பிற்கான பாடத்திட்டங்களை வகுப்பார்கள். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் அடிப்படைப்பொறியியல் படிப்பும் கற்றுக் கொடுக்கப்படும். இயற்பியல், வேதியல் பாடங்களுக்கு மாணவர்கள் ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்வார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 50 சதம் கணினி தொடர்பான பாடங்களும், 50 சதம் மருத்துவத்துறையில் கணினியின் பயன்பாடுகள் குறித்து செயல்முறைப் பயிற்சிகளும் அளிக்கப்படும். 

முதல் மூன்று ஆண்டுகளில்கோடைவிடுமுறைக் காலத்தில் 3 மாதங்கள் மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். நான்காம் ஆண்டின்எட்டாவது செமஸ்டரில் மாணவர்கள் புராஜெக்ட் வொர்க் செய்ய வேண்டும்.இதற்காக குறிப்பிடத்தக்க சில நிறுவனங்களில் மாணவர்கள் பயிற்சி பெற ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.மேலும் மாணவர்களுக்குப் பல்நோக்கு மருத்துவமனைகளில் நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள இயலும். 

இந்தப் படிப்பு படித்த மாணவர்கள் மருத்துவ உலகிற்கு தேவையான புதிய கருவிகளைக் கண்டுபிடித்து, அதனைத் தயாரித்து விற்பனைசெய்து சுய தொழில் செய்யலாம். மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை கிடைக்கும். பல் நோக்கு மருத்துவமனைகளில் கணினியைக் கையாள்வது உள்ளிட்ட வேலைகள் கிடைக்கும். மருத்துவர் உதவியுடன் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஸ்கேன் மையம் தொடங்கலாம். மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், சிறு மற்றும் குறு தொழில்கள் செய்ய 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டு, சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்துவதோடு, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் என்பது உறுதியாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com