நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் தனித்துவமான மர்ம உலகங்களைக் கண்டறிந்து வரும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி, பாறையைக்கூட ஆவியாக்கும் அளவுக்கு வெப்பநிலை கொண்ட ஒரு வித்தியாசமான கிரகத்தைக் கண்டறிந்துள்ளது.
இந்தத் தொலைநோக்கி புதிதாக கண்டறிந்துள்ள, வியாழன் கிரகத்தையொத்த இரு கிரகங்களில் ஒன்றில்தான் 3,000 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை காணப்படுகிறது. டைட்டானியம் போன்ற வலிமையான உலோகங்களைக்கூட ஆவியாக்கும் அளவு அதிக வெப்பநிலை கொண்டது.
அவற்றில் பூமியிலிருந்து 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்துக்கு டபிள்யுஏஎஸ்பி-178பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் வளிமண்டலம் முழுவதும் சிலிகான் மோனாக்ûஸடு வாயுவால்நிரம்பியுள்ளது.
இக்கிரகத்தின் பகல் வேளை பக்கமானது மேகமற்று இருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், கிரகத்தின் இரவு வேளை பக்கமானது மணிக்கு 2,000 மைல் வேக சூறாவளியுடன் கடுமையான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது.
அதிகாலை மற்றும் அந்திசாயும் பொழுதில்கூட பாறைகளை ஆவியாக்கும் அளவுக்கு வெப்பநிலை அங்கு காணப்படுகிறது. பூமி அதன் துணைக் கோளான நிலவைக் கொண்டிருப்பதைப் போல, இந்தக் கிரகம் அதன் நட்சத்திரத்தைக் கொண்டிருக்கிறது.
வியாழன் கிரகத்தையொத்த மற்றொரு கிரகத்துக்கு கேஇஎல்டி-20பி என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கிரகத்தில், அதன் தாய் நட்சத்திரத்திலிருந்து வரும் புறஊதா ஒளியானது அதன் வளிமண்டலத்தில் ஒரு வெப்ப அடுக்கை உருவாக்குகிறது. இதுவரை ஒரு தாய் நட்சத்திரம் ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நேரடியாக ஏற்படுத்தும் மாற்றங்களை நாம் அறிந்ததில்லை. இப்போது அதற்கான தரவுகள் கிடைத்துள்ளன என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள்.
இந்தக் கிரகங்களைப் பற்றிய ஆய்வு முடிவுகள் "ஜர்னல் நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


