வேலை... வேலை... வேலை...

www. clri.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனுடன் கலர்
வேலை... வேலை... வேலை...


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: Central Leather Research Institute, Chennai.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ

காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 31,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: புரொஜக்ட் அசோசியேட் - ஐ
காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.25,000 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக்., எம்.பார்ம், எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https:// www. clri.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனுடன் பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளம் உள்ளிட்ட ஏதாவதொரு அடையாள அட்டையுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIRCentral Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai- 600020

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2022

மேலும் விவரங்கள் அறிய: https://www.clri.org/docs/2022/news/Notification%20No.03}2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

மொத்த காலியிடங்கள்: 86
பணி: ஓட்டுநர்

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: இரவு காவலர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஒட்டத்தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம்: சிவகங்கை - 6, திருவண்ணாமலை - 5, வேலூர் - 5, கள்ளக்குறிச்சி - 7, ராமநாதபுரம் - 3, புதுக்கோட்டை-7, மதுரை - 4, திருப்பூர் - 5, ஈரோடு- 5, காஞ்சிபுரம் - 4, சென்னை - 4, நாகப்பட்டினம் - 5, மயிலாடுதுறை - 6, திண்டுக்கல் - 2, திருச்சிராப்பள்ளி - 9, தூத்துக்குடி - 5.
வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது 21, 22, 25, 26, 28,29, 30க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற லிங்கில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தமிழக அரசில் பொறியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மொத்த காலியிடங்கள்: 626

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) - 04
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

பணி: இளநிலை மின் ஆய்வாளர் - 08
பணி: உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) - 66
பணி: உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) - 33
பணி: உதவி இயக்குநர், (தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) - 18
பணி: உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) - 01
பணி: உதவி பொறியாளர் (பொதுப்பணித் துறை) - 1+ 307
பணி: முதலாள் - 07
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 11
பணி: உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) - 93

சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,38,500

பணி: உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 64

பணி: உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) - 13
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணமாக ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 26.06.2022 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2022

மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

தகுதி: சமூகவியல் அல்லது சமூகப்பணி அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி,

எஸ்டி, எம்பிசி, பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2022

மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/tamil/2022_08_DCPO_tam.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மத்திய அரசில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மொத்த காலியிடங்கள்: 53
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இந்தியன் ஸ்டேடிஸ்டிகல் சர்வீஸ் எக்ஷாமினேஷன்

காலியிடங்கள்: 29
பணி: இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் எக்ஸாமினேஷன்

காலியிடங்கள்: 24
தகுதி: பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம், புள்ளியியல், கணிதப் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி, 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2022

மேலும் விவரங்கள் அறிய: https://upsconline.nic.in/mainmenu2.php அல்லது https://upsconline.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 604

பணியிடங்கள்: சென்னை, கொல்கத்தா, லக்னெள, மும்பை, கோவா
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஹாண்டிமேன் - 277
பணி: கஸ்டமர் ஏஜென்ட் - 206
பணி: யூட்டிலிட்டி ஏஜென்ட் - 96
பணி: ராம்ப் சர்வீஸ் ஏஜென்ட் - 12
பணி: டியூட்டி மேனேஜர் - 06
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் - 05
பணி: டெர்மினல் மேனேஜர் - 02

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: டெர்மினல் மேனேஜர், டியூட்டி மேனேஜர் பணிக்கு 55-க்குள்ளும் மற்ற பணிகளுக்கு 28-க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.aiasl.in/Recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: HRD Department, Air India Premises, AI Airport Services Limited,New Technical Area, GS Building, Ground Floor, Kolkata: 700 052

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.4.2022
மேலும் விவரங்கள் அறிய: www.aiasl.in/Recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com