கைவிடப்பட்ட ஒரு ராக்கெட் மணிக்கு 8,000 கி.மீ. வேகத்தில் நிலவில் மோதினால் என்ன ஆகும்? அப்படி ஒரு நிகழ்வு மார்ச் 4ஆம் தேதி நிகழவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட்டின் ஒரு பெரிய பகுதிதான் அவ்வாறு நிலவின் தூரப் பகுதியில் (பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத பகுதி) மோதவுள்ளது. விண்கற்கள் ஆராய்ச்சியாளரான பில் கிரே, தனது புவி சுற்றுப்பாதை தொடர் பறிதல் சாஃப்ட்வேர் மூலம் இதைக் கண்டறிந்துள்ளார்.
2015ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி காலநிலை செயற்கைக்கோளை சுமந்து கொண்டு சென்றது ஃபால்கன் ராக்கெட். புவியின் சுற்றுப் பாதையில் அதனை நிலை நிறுத்தும் பணியையும் வெற்றிகரமாக நிறைவு செய்தது.
அதன் பிறகு எரிபொருள் தீர்ந்ததால் விண்வெளியிலேயே கைவிடப்பட்ட நிலையில், இப்போது நிலவின் தரைப் பகுதியில் மார்ச் 4ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.55 மணிக்கு மோதவுள்ளது அந்த ராக்கெட். சரி, இந்த அசாதாரணமான மோதலால் நிலவில் என்ன ஆகும்? விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, ஃபால்கன் ராக்கெட் மோதுவதால் நிலவின் தரைப்பரப்பில் 520 கி.மீ. விட்டம் அளவு உள்ள பள்ளம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. நிலவில் வளி
மண்டலம் இல்லாததால் ராக்கெட் தரையில் மோதும்போது தீப்பிடிக்காது.
இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியலாளர் ஜொனாதன் மெக்டவல், ""நிலவில் உள்ள பாறைகளில் ராக்கெட் மோதி மேற்பரப்பில் சிதறல்களை ஏற்படுத்தும்.
இதனால், பெரும் தூசி மண்டலம் கிளம்பும்'' என்கிறார்.
""மேலும், 60, 70, 80ஆம் ஆண்டுகளில் புவியின் சுற்றுப் பாதையில் குறைந்தது 50 ராக்கெட், செயற்கைக்கோள்களாவது கைவிடப்பட்டன. அவற்றை நம்மால் கண்டறிய முடியவில்லை.
அவற்றில் ஒருசில நிலவில் ஏற்கெனவே மோதியிருக்கலாம்'' என்றும் கூறுகிறார் அவர்.நிலவின் தூரப் பகுதியில் இதுவரை இரண்டு விண்கலங்கள்தாம் தரையிறங்கியிருக்கின்றன. அமெரிக்காவின் ரேஞ்சர் 4 விண்கலம் 1962இல் தரையிறங்கியது. சீனாவின் சாங்கே4 விண்கலத்தின் யூட்டு ஆய்வு வாகனம் இப்போதும் நிலவின் தூரப் பகுதியில் சுற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஃபால்கெட் ராக்கெட் நிலவில் மோதவுள்ளது.
வானியலாளர்களுக்கு இது சாதாரண ஒரு நிகழ்வு. வானியல் ஆர்வலர்களுக்கு ஓர் ஆச்சரியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


