வேலை... வேலை... வேலை...

வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர் கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் இல்லை.
வேலை... வேலை... வேலை...
Updated on
3 min read


இந்தியன் வங்கியில் வேலை

பணி: பாதுகாப்பு பணியாளர்கள் காலியிடங்கள்: 202

சம்பளம்: மாதம் ரூ.14,500 முதல் ரூ.28,145 வரை.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர் கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் இல்லை. முன்னாள் இராணுவப் பணியாளர்கள் மெட்ரிகுலேஷன் படித்திருந்தால், அது இளநிலைப் பட்டம் பெற்றதாகக் கருதப்படும். பணியிடம் உள்ள பகுதியில் உள்ள மொழியைப் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதியும் கணக்கிடப்படும்.

வயது வரம்பு: 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் 31 வயதிற்கு மிகாமலும் ஓபிசி பிரிவினர் 29 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு, உடற்தகுதி, ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.indianbank.in/wp-content/uploads/2022/02/Recruitment-of-Security-Guards-in-Subordinate-Staff-Cadre-2022-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.03.2022


இந்திய கடலோர காவற்படையில் வேலை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஃபோர்மேன் ஆஃப் ஸ்டோர்ஸ்

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1, 12, 400 வரை.

தகுதி: எகனாமிக்ஸ், காமர்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசினஸ் ஸ்டடீஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதுநிலைப் பட்டம் மற்றும் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது மேற்கண்ட பிரிவுகளில் இளநிலைப் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும்முறை: விண்ணப்ப சரி பார்ப்பு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indiancoastguard.gov.in/ என்ற இணையதளத்தின் உள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

THE DIRECTOR GENERAL,
[For PD (Rectt)],
COAST GUARD HEADQUARTERS,
DIRECTORATE OF RECRUITMENT,
C-1, PHASE II, INDUSTRIAL AREA,
SECTOR-62, NOIDA,

மேலும் விவரங்கள் அறிய: https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202202110553372444611Recruitment-Delhi.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.03.2022


தேசிய அனல் மின்நிலையத்தில் வேலை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மைனிங் ஓவர்மேன்

காலியிடங்கள்: 74
சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: பொறியியல் துறையில் மைனிங் சர்தார் பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: மைனிங் சர்தார்

காலியிடங்கள்: 103

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்தார் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/CMHQ%2002_2022%20Employment%20News%20ad%20English%20For%20Website.jpg என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.03.2022

கெயில் இந்தியா நிறுவனத்தில் வேலை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: எக்ஸிகியூட்டிவ் ட்ரெய்னி (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) - 18
பணி: எக்ஸிகியூட்டிவ் ட்ரெய்னி (மெக்கானிக்கல்) - 15
பணி: எக்ஸிகியூட்டிவ் ட்ரெய்னி (எலக்ட்ரிகல்) - 15

வயது வரம்பு: 16,03.2022 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,80,00

தகுதி: பொறியியல் துறையில் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரிகல் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் & எலக்ரானிக்ஸ், மெக்கானிக்கல், புரொடக்ஷன், புரொடக்ஷன் & இன்டஸ்ட்ரியல், மெனுபேக்சரிங், மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் GATE - 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: GATE - 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் https://gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://gailonline.com/careers/currentOpnning/DETAILED ADVERTISEMENT FOR WEBSITE GATE 20228092021.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2022

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை

பணி: எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (பைனான்ஸ்)
காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை.
தகுதி: எஸ்ஏஜி அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிதி, கணக்கியல், பட்ஜெட், உள் தணிக்கை மற்றும் கருவூலக் கட்டுப்பாடு போன்ற பிரிவுகளில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 17.03.2022 தேதியின்படி 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் பணிசெய்யும் அலுவலகம் மூலமாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை அடிப்படையாகக் கொண்டு பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை க்ங்ல்ன்ற்ஹற்ண்ர்ய்ஃண்ழ்ஸ்ரீர்ய்.ர்ழ்ஞ் என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://indianrailways.gov.in அல்லது https://indianrailways.gov.in/railwayboard/uploads/irpersonel/Vacancy_Circular/2022/VN-02-IRCON.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com