வாட்ஸ்ஆப்பில் புதிய சேவைகள்!

பயன்பாட்டாளர்களுக்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்வதில் வாட்ஸ்ஆப் முதலிடத்தில் உள்ளது. 
வாட்ஸ்ஆப்பில் புதிய சேவைகள்!

பயன்பாட்டாளர்களுக்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்வதில் வாட்ஸ்ஆப் முதலிடத்தில் உள்ளது.  அதன்படி, தற்போது வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் ஒலி பதிவுகளில் தேவையானவற்றை மட்டும் தேர்வு செய்து அனுப்பும் புதிய சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்துபவர்கள் 2.22.6.0 வெர்ஷனுக்கு அப்டேட் செய்து இந்த சேவையைப் பெறலாம் என்று மிட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதபோல், வாட்ஸ்ஆப் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்படும் கம்யூனிட்டி சேவையும் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் ஸ்டேடஸ் அப்டேட்டை பிற சமூக வலைதளங்களில் பகிர்வதற்கான அனுமதியும் வாட்ஸ்ஆப் அளித்துள்ளது. இந்த அப்டேட்டுகள் 24  மணி நேரத்தில் மறைந்துவிடும்.

ஒருவரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டûஸ யார் யார் பார்க்கலாம் என்பதையும் பயன்பாட்டாளர்களுக்கு தேர்வு செய்யும் வசதி அளிக்கப்பட உள்ளது.

வாட்ஸ்ஆப் குழு உறுப்பினர்கள் அனுப்பிய தகவல்களை அவர்களின் அனுமதி இல்லாமல் அழிக்கும் சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதேபோல், கணினியில் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்த உள்ளே நுழையும்போது கூடுதல் பாதுகாப்பாக நான்கு இலக்க எண்ணை பதிவிடும் சேவை அறிமுகமாக உள்ளது.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் உள்ளதைப்போல் எமோஜிகளை அறிமுகம் செய்யவும்,  ஒரு தகவலுக்கு உறுப்பினர்கள் தெரிவிக்கும் எமோஜி பதில்கள் அனைத்து உறுப்பினர்களுக்கு தெரியும் வகையில் இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் விடியோக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப்  பதிவிறக்கம் செய்து உள்ளே சென்று பார்க்காமலேயே மேலோட்டமாகக் (பிரிவியூ) காணும் வசதியும் விரைவில் வெளியாக உள்ளது.

ஒரே புகைப்படத்தையோ, விடியோவையோ ஸ்டேட்டஸில் அல்லது குழுவில் அல்லது தனியாக சாட்டில் பயன்படுத்தும் வகையில் புதிய சேவை வெளியாக உள்ளது.

இறுதியாக வாட்ஸ்ஆப் தொலைபேசி அழைப்புகளின் திரையை மேம்படுத்தி அதிலும் புதிய சேவைகளை அளிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் வரும் நாள்களில் வாட்ஸ்ஆப்பின் புதிய சேவைகள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com