தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மத்திய யுவ புரஸ்கார் விருது! தந்தை ஹீரோ... தாய் குரு! சொல்கிறார் : அகிலா ராம்நாராயண்

தியேட்டர் பிரிவில் என்றாலும், நடிப்புக்காகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  மற்றவர்கள் நாடக உருவாக்கம், நாடக இயக்கம், ஒளியமைப்பு, மற்றும் இதர துறைகளில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.   

News image
Updated On :17 நவம்பர் 2015, 11:06 am

சாருகேசி

ஆண்டு தோறும் நாற்பது வயதுக்குட்பட்டவர்களில் கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் விருது 2013ஆம் ஆண்டுக்காக தியேட்டர் - அதாவது

நாடகத் துறையில், தமிழ் நாட்டைச் சேர்ந்த அகிலா ராம்நாராயணுக்கு வழங்கப்பட இருக்கிறது.   இவர் கல்கியின் பேத்தி கௌரி ராம்நாராயண் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர், ஸ்ருதி மாத இதழின்

ஆசிரியர் ராம்நாராயண் அவர்களின் புதல்வி. அவரிடம் உரையாடியதிலிருந்து:

நீங்கள் எந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் - நாடகத் தயாரிப்புக்காகவா அல்லது நாடக இயக்கத்துக்காகவா?

தியேட்டர் பிரிவில் என்றாலும், நடிப்புக்காகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  மற்றவர்கள் நாடக உருவாக்கம், நாடக இயக்கம், ஒளியமைப்பு, மற்றும் இதர துறைகளில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.   

எந்தக் குறிப்பிட்ட படைப்புக்காகவாவது தேர்ந்தெடுத்தார்களா?

எனக்குச் சரியாகத் தெரியாது.  நடிப்புக்காக உங்களுக்கு யுவ புரஸ்கார் விருது என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

என்னென்ன தயாரிப்புகளை நீங்கள் தனியாகப் படைத்திருக்கிறீர்கள்?

அம்மா கௌரி ராம்நாராயணின் ஜஸ்டஸ் ரெப்பர்ட்டரியின் பல தயாரிப்புகளில் 2007 முதல் நான் பங்கு கொண்டிருக்கிறேன்.  மோகன் ராகேஷின் "ஒன் டே இன் ஆஷாடா', "ப்ளேம் ஆப் த பாரஸ்ட்', "வாட்டர் லில்லீஸ்', "ரூரல் பான்டஸி', "லான்ட் ஆப் த ப், சப்வெர்ஸ்', "நைட்ஸ் என்ட்' இவை எல்லாவற்றிலும் நடித்துமிருக்கிறேன்.  பாடியும் இருக்கிறேன்.  சப்வெர்ஸýக்கு நானும் கூடவே ஸ்ரிக்ப்ட் எழுதினேன்.  மற்ற எல்லா நாடகங்களும் அம்மா கௌரி ராம்நாராயண் எழுதியவை.  2015ல் எங்கள் சஹ்ருதயா அமைப்புக்காக "டான் க்விக்úஸôடே'யை நாடகமாக்கி நடித்தேன்.  ஸ்பானிஷ் மொழி இலக்கியத்தில் தலை சிறந்த மிகேல் செர்வன்ட்டிஸ் இதை எழுதியிருக்கிறார்.  இந்த நாடகத்தை இயக்கி, நடன அமைப்பும் செய்து கொடுத்தவர் பரத நாட்டியக் கலைஞர் ஷீஜித் கிருஷ்ணா. இப்போதுதான் 15 அமெரிக்க நகரங்களில் நிகழ்ச்சிகளை வழங்கிவிட்டுத் திரும்பியிருக்கிறோம்.

நாடகத்துக்கான கதையை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ?  நீங்களே தன்னிச்சையாக முடிவெடுப்பீர்களா?

அமெரிக்காவின் ஒஹையோவில், டேடன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் துணைப் பேராசியராகப் பார்த்துக் கொண்டிருந்த வேலையை 2011ல் விட்டுவிட்டு,

இந்தியா திரும்பினேன் - கலை வாழ்க்கையைத் தொடர.  என் பெற்றோர் ஜஸ்டஸ் ரெப்பர்ட்டரியில் நான் 2007 முதலே இருந்து வந்ததால், கோடை விடுமுறையில் இங்கே வந்துவிடுவேன்.  ஷீஜித் கிருஷ்ணாவின் ஸஹ்ருதயா பவுண்டேஷணின் நிறுவனர்களில் நானும் ஒருத்தி.  மற்றவர்கள் மஞ்சா, ஜ்யோதிஷ்மதி ஷீஜித் மற்றும் அஞ்சனா ஆனந்த்.

 ஒரு நடிகையாக கௌரி ராம்நாராயணுடன் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பெரிய பேறு.  இவர்தான் என் குரு.  அவருடைய எழுத்தை முதலில் படிப்பதற்கும், அதில் நடிப்பதற்கும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.  எங்கள் இருவருடைய இலக்கிய மற்றும் அரசியல் சிந்தனைகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தன.  அவரும் தன் முடிவுகளை எங்களுடன் சேர்ந்தே எடுப்பார்.  ஜஸ்டஸ் ரெப்பர்ட்டரியிலும், ஸஹ்ருதயாவிலும் நான் பல அற்புதமான நடிகர்களுடன் நடித்ததைப் பெரிதும் மதிக்கிறேன்.  ஒரே மாதிரியான நினைப்பும், இலக்கும் எங்களுக்கு இருந்ததால் எல்லாமே ஒரு வகையில் மிகச் சரியாக அமைந்துபோய்விட்டன.

உங்கள் தயாரிப்பில் உங்கள் பெற்றோர் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது  அவர்களின் கருத்தைக் கேட்பீர்களா?

எங்கள் குடும்பமே எழுத்தாளர் குடும்பம் என்பதால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம்.  என் பெற்றோர் அவர்கள் தயாரிப்புகளைப் பற்றி என்னிடம் மட்டுமல்லாமல் என் சகோதரன் அபினவ்விடமும் கேட்பார்கள். இந்த வகையில் எல்லா அபிப்ராயங்களும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். உரையாடல்களும், கற்பனை விவாதங்களும் தினசரி விஷயங்களாக ஆகிப் போய் எங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

நாடகம் முடிந்ததும் உங்கள் பெற்றோர் என்ன சொல்வார்கள்?

அவர்கள் என் வலுவான ஆதரவாளர்கள் மட்டுமல்ல.  தீவிரமான விமர்சகர்கள். நான் வளர்வதற்கான, விரிவான விமர்சனம் அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்துவிடும். என் தந்தைதான் என் ஹீரோ.  தாய் என் குரு.  ஒரு பெண்ணுக்கு இதைவிட நல்லது வேறு என்ன இருந்துவிட முடியும்

ஏதாவது ஒரு கட்டத்தில், நினைத்தபடி நடக்காமல் போய், எல்லாவற்றையும் வீசியடித்து விட்டுவிடலாம் என்று நினைத்ததுண்டா?

நான் சரியாக உறங்க மாட்டேன்.  நள்ளிரவில்கூட எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன்.   ஒரு பாத்திரத்தின் உண்மைத் தன்மையை உள்வாங்கிக் கொள்ளவும், அதை அப்படியே அப்பட்டமாக வெளிப்படுத்தவும் நான் திணறித் திண்டாடிப் போயிருக்கிறேன்.  அதிலும், ஆஷாடா, வாட்டர் லில்லீஸ், நைட்ஸ் என்ட் ஆகிய நாடகங்கள் வேறு வகை.  தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணின், அழுத்தி வைக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணின் உணர்வுகளை அசலாக சித்திரிக்க வேண்டும்.  இந்தப் பொறுப்பின் காரணமாக, ஒட்டுமொத்தமான நன்மைக்காக, என்னுடைய சொந்த ஆற்றாமையையும், பயத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது.

சிறு வயதில் எப்படி இருந்தீர்கள்?

நான் டீன் ஏஜ் பெண்ணாக இருந்த போது, ஒரு ரெபல் ஆக - எதையும் எதிர்ப்பவளாக - இருந்தேன்.  சாஸ்திரிய இசைப் பயிற்சியைக் கிண்டல் பண்ணிக்கொண்டு, ராக் மியூசிக்கை ரசித்துக் கொண்டிருந்தேன்.   அப்போதெல்லாம் கர்நாடக இசை பயிலவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இப்போது அதை விரும்பி ரசிக்கிறேன். முன்பும் நான் கர்நாடக இசையை விரும்பினாலும், விரும்பாத மாதிரி வெளியில் காண்பித்துக் கொண்டேனோ என்று நினைக்கிறேன்.  இப்போது நான் முறைப்படி எந்த குருவிடமும் கற்றுக்கொள்ளா விட்டாலும், என் அம்மாவிடமிருந்து நாடகத்துக்கான பாட்டுக்களைக் கற்றுகொள்கிறேன்.  நான் கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டையும் பாடுகிறேன்.  சில சமயம் தியேட்டர் தயாரிப்போடு எழுதவும் செய்கிறேன்.  பெரும்பாலும் மேற்கத்திய இசை.  எனக்கென்னவோ என் இசைத் திறமை மேல் முழு நம்பிக்கை இல்லைப்பா

ரிஹர்சல் எல்லாம் எப்படி?  எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள்?

சில சமயம் மாதக் கணக்காக. சில சமயம் வருடக் கணக்காகவும் ஆவதுண்டு  நம்ப முடியலே இல்லே?

யுவபுரஸ்கார் செய்தி முதலில் யாரிடமிருந்து  தெரிந்து கொண்டீர்கள் ? அப்போது எங்கே இருந்தீர்கள்  எப்படி உணர்ந்தீர்கள்?

என்னுடைய அப்பா மூலம்தான்.  அவரிடம் என் டெலிபோன் எண்ணைக் கேட்டிருக்கிறார்கள்.  என்னுடைய பிரமதி டெக்னாலஜிஸ் சென்னை அலுவலகத்தில் நான் வேலையில் ஈடுபட்டிருந்த போது செய்தி வந்தது.  முதலில் நம்ப முடியாததாக இருந்தது.  அப்புறம் அசர வைத்துவிட்டது அந்தச் செய்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.