தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாசனை மருத்துவம்!

மூலிகை மருத்துவம், மலர் மருத்துவம் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  வாசனை மருத்துவம் பற்றித் தெரியுமா  சொல்கிறார் பிளாஸம் கோச்சார்.

News image
Updated On :25 நவம்பர் 2015, 6:05 am

சாருகேசி

மூலிகை மருத்துவம், மலர் மருத்துவம் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  வாசனை மருத்துவம் பற்றித் தெரியுமா  சொல்கிறார் பிளாஸம் கோச்சார்.

Story image

""நான் ஊட்டியில் பள்ளியில் படித்துவந்தபோது, ஜலதோஷம் தலைவலி வந்தால், பள்ளிக்கூட நன் ஒருவர் எங்கிருந்தாவது ஒரு மூலிகையைக் கொண்டுவந்து கையில் வைத்துப் பிசைந்து பிழிந்து அதன் சாற்றை நெற்றியிலும், மூக்கிலும் தடவுவார்.  அப்புறம்தான் தெரிந்தது, அது யூகலிப்டஸ் இலை என்று!  இப்படி இளம் வயதிலேயே நான் இந்த மூலிகைகளின், மலர்களின், மருத்துவ குணங்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தேன்.  பின்னர், கோச்சார் அவர்களுடன் திருமணம் ஆகி தில்லி வந்துவிட்டேன்.  (அவரும் ஊட்டி வெலிங்க்டன் ராணுவப் பள்ளியில் பயின்று பின்னர் ராணுவத்தில் அதிகாரியானார்) மூலிகைகளின், இலைகளின், மலர்களின் மருத்துவ குணம் பற்றி நம் ஆயுர்வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.  "வேதா

ஆஃப் ரிஜுவனேஷன் நூலில் ரஸôயன தந்த்ரம், வஜ்ர கரன் தந்த்ரம் ஆகியவை  குறித்துச் சொல்லுகின்றன'' என்றார் தில்லியிலிருந்து சென்னை வந்திருந்த பிளாஸம் கோச்சார்.

அவர் வகுப்பு நடத்திய ஓட்டலில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் அவர் சொல்வதைக் கேட்கக் காத்திருந்தனர்.  இந்தத் துறையில் சொந்தமாகத் தொழில் தொடங்க எண்ணுவோருக்கு இருக்கும் வேலை வாய்ப்புதான் காரணம்.  இன்னொன்று: சில்லறை விற்பனை வாய்ப்பு. 

மலர் மருத்துவம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  இந்த அரோமா தெரபி எனப்படும் வாசனை மருத்துவம் சற்று வித்தியாசமாக இருக்கிறதே என்று பிளாஸம் கோச்சாரிடம் கேட்டோம்:

""இவை புதியவையே அல்ல.  பண்டைய நாகரிகங்களில் இந்திய, சீன, எகிப்திய நாகரிகங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. நம்முடைய இந்திய மூலிகை மருத்துவத்தில் உள்ளதுதான் வாசனை மருத்துவமும்.   இவை மூன்று தளங்களில் செயல்படுகின்றன. ஒன்று மனத்தளவில். டிப்ரஷன் (மனச் சோர்வு), ஆங்க்ûஸடி (கவலை) இவற்றுக்கு நிவாரணமளிக்கும்.  இரண்டாவது ஒப்பனை அளவில்  செயல்படும். அதாவது காஸ்மெடிக் லெவல்.  கண்களைச் சுற்றிக் கருவளையும், வயதான தோற்றம் ஆகியவற்றை குணப்படுத்தும்.  மூன்றாவது மன அழுத்தம் காரணமாக வரும் - ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.  மன அழுத்தத்தால் வீக்கம் உண்டாகும்.  வைரல் தாக்கம்கூட ஏற்படும்.  அப்போது இதைப் பயன்படுத்தலாம்.''

இருபத்தைந்து ஆண்டுகளாக அரோமா தெரபி மற்றும் ஹெர்பலிஸம் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருபவர் பிளாஸம் கோச்சார்.

""இந்த வாசனை மருத்துவத்தில் எல்லாமே இயற்கையின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டவை.  சருமத்துக்கும், உடலுக்கும் தேவையான அத்தனையும் இதில் கிடைக்கின்றன.  அவற்றை நாங்கள் எங்கள் பிளாஸம் கோச்சார் அரோமா மாஜிக் என்ற பெயரில் உத்தரபிரதேசத்தில் உள்ள ரூர்க்கியில் தயாரித்து வருகிறோம்.   இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதற்காக  பிளாஸம் கோச்சார் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் டிசைன் நடத்தி வருகிறோம்.  மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை பயிற்சி பெறலாம்.  பிறகு சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பித்து வருமானம் ஈட்ட முடியும்.''

பிளாஸம் கோச்சார், அவர் பேச்சைக் கேட்க வந்திருந்தவர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.  ""எங்களுடைய தயாரிப்பைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.  ஆனால் நீங்கள் நல்ல பெயருள்ள பிராண்ட் தயாரிப்பையே பயன்படுத்துங்கள்.  ரொம்ப ùஸன்ஸிடிவ் ஸ்கின்னாக இருந்தால் ப்ளீச்சிங் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனை கூறுகிறார்.  வேக்ஸிங் செய்தபிறகு வாஷிங், முகத்தில் வளரும் சருமத்தை நீக்குவதில் கவனம், வறண்ட சருமம், எண்ணெய்ப்பசையான சருமம் இவற்றைக் கையாளும் முறை என்று விவரமாக எடுத்துச் சொல்கிறார். 

அரோமா தெரபியில் விசேஷமாக ஒன்றிரண்டைச் சொல்லுங்கள்?

எதிலும் கவனம் இல்லை.  தேர்வு சமயத்தில் பாடத்தில் கவனம் செல்வதில்லை.  எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை என்று கூறிக்கொண்டு வருகிறவர்களிடம் போகஸ் அரோமா தெரபியைப் பயன்படுத்தச் சொல்லுகிறோம்.  சிலர் சில சமயங்களில் ரொம்பவும் நெர்வஸôகி விடுவார்கள். குறிப்பாக மணப்பெண்கள்.  அதற்கென்றே ஹெல்ப் மீ - ஐம் நெர்வஸ் தெரபி இருக்கிறது.   எல்லாவற்றிலும் முக்கியமாக, ஹெல்ப் மீ -  ஐ ஹேவ் ஹெட் ஏக் தலைவலிக்காரர்களுக்கு சிறந்த நிவாரணமாக இருந்து வருகிறது.  மைக்ரேன் போன்ற தலைவலியால் அவதிப்படுபவர்கள் அனேகம் பேர் இதனால் குணமடைந்திருக்கிறார்கள்.  தூக்கம் வராமல் துன்பப்படுபவர்களுக்கு ஹெல்ப் மீ - ஐ நீட் ஸ்லீப் மருத்துவம் இருக்கிறது.  இதெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.  இவை பக்க விளைவுகள் இல்லாதவை

நீங்கள் கண்டுபிடிப்பாளராக, தொழிலதிபராக இருக்கிறீர்கள். உங்களுக்கு விருதுகள் பரிசுகள் கிடைத்திருக்கின்றனவா?

நான்காவது இந்தியன் எஜுகேஷன் அவார்ட் மே 2014 இல் கிடைத்தது.  இது சிறந்த பெண் தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுவது.   மார்ச் 2014 இல், இந்தியன் கவுன்ஸில் ஃபார் யு.என். ரிலேஷன்ஸ் விருதை, சர்வதேச மகளிர் தினத்தன்று தில்லியில் வழங்கியது.  சமீபத்தில் யூனிவர்ஸல் ஹ்மானிடி அவார்டும், கேட்ஸ் அன்ட் கஸ்டோடியன் பெர்சன் அவார்டும் பெற்றிருக்கிறேன்.  இவை தவிர இந்திய தலைமுடி, அழகு மற்றும் ஸ்பா துறையில் அரோமா தெரபியை அறிமுகப்படுத்தியதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது.  இன்னும் சில இருக்கின்றன'' என்றார்.

உலகத் தரம் வாய்ந்த பயிற்சிப் பள்ளியை நடத்தி வருவது தவிர, ஹேர் அன்ட் பியூட்டி அகடமி, மேக் அப் டிசைனர் மற்றும் ஸ்பா அகடமிகளும் நடத்தி, சிறந்த பயிற்சியாளர் குழுவையே உருவாக்கியிருக்கிறார். 

இவர்களது பயிற்சி வகுப்புகள்டிடிகே சாலையில் டி-மாண்டி காலனி அருகே செயல்படுகிறது.

தேசிய ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனின் கவர்னிங் கவுன்சிலில் ஒப்பனை மற்றும் ஆரோக்கியத் துறை உறுப்பினர். சமீபத்தில் நடைபெற்ற வேர்ல்ட் ஸ்கில்ஸ் இந்தியா போட்டியில் இவர் ஜூரியாகப் பணியாற்றியிருக்கிறார்.  சி.பி.எஸ்.ஸி. பள்ளிப்பாடத் திட்டத்தில் ஒப்பனைத் துறையில்  கோச்சார் டெக்னிகல் எக்ஸ்பர்ட்டாக இருந்து வருகிறார்.

அறுபது நிமிடங்களில் முகச் சருமப் பாதுகாப்புக்கு எத்தைகைய ஒப்பனை தேவைப்படுகிறது என்பதை, படிப்படியாக, தம் உதவியாளர் மூலம் அவர் கற்றுக் கொடுத்ததைப் பார்க்கையில், இவர் இந்தத் துறையில் கல்வியாளராக இருப்பதற்குத் தகுதியுள்ளவர்தாம் என்று நம்மை முடிவெடுக்க வைத்தது.

 அழகுக் கலைத் துறையில் பிளாஸம் கோச்சார் ஒரு முன்னோடி என்று நமக்கு அறிமுகம் செய்தார்கள்.  எல்லாம் நம் இந்தியாவில் இருக்கிறதுதான். ஆனால் ஆஸ்திரேலியா, நேபாளம், இலங்கை, ஹாங்காங்க் போன்ற இடங்களிலும் எங்களுக்கு வரவேற்பு இருப்பதைக் காணும்போது, நம் பாரம்பரியத்தின் பெருமை மகிழ்ச்சி தருகிறது என்று அடக்கமாகச் சொல்கிறார் கோச்சார்.  மகள் சமந்தா கோச்சார் நிறுவனத்தை கவனித்துக்கொள்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.