தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்களே இயக்கும் இன்னர்வீல் இயக்கம் கனவுப் பயணம்

ரோட்டரி கிளப் ஆண்களுக்கு என்றால், அவர்களின் மனைவிகள் நடத்துவது "இன்னர் வீல்' இயக்கம். 

News image
Updated On :12 அக்டோபர் 2015, 11:06 am

சாருகேசி

ரோட்டரி கிளப் ஆண்களுக்கு என்றால், அவர்களின் மனைவிகள் நடத்துவது "இன்னர் வீல்' இயக்கம்.  ஐந்து நட்சத்திர ஓட்டலில் கூடிப் பேசி, உணவருந்திவிட்டுச் செல்வார்கள் என்று மட்டுமே எண்ணிவிடக் கூடாது என்பது  சமீபத்தில் இன்னர் வீல் டிஸ்ட்ரிக்ட் நடத்திய கூட்டத்தின் மூலம் தெரியவந்தது. பிரபல மகளிர் மருத்துவர் டாக்டர் கீதா அர்ஜுனும், டாக்டர் ஸ்ரீராமும் பெண்கள் உடல் நலம் குறித்துப் பேசிய போது, நூற்றுக்கு மேற்பட்ட அழைப்பாளர்கள். அவர்கள் தந்த ஆலோசனைகளைக் கேட்டார்கள்.  சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளியூரில் உள்ளவர்களுக்காக யூடியூப் வழியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்

பட்டது.

இன்னர் வீல் இயக்கத்தின் 323-இன் திட்டங்கள் ஒருங்கிணைப்பாளர் ரேவதி ராஜா தம் இயக்கம் குறித்துப் பேசினார்:

இன்னர் வீல் என்றால் மேட்டுக்குடியினரின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்று என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.  ஆனால் நாங்களும் அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தி

வருகிறோம் என்று பலருக்கும் தெரியாது. 

நீங்கள் எப்போதிலிருந்து இந்த இயக்கத்தில் இருந்து வருகிறீர்கள்?

1997லிருந்து நான் இன்னர் வீல் இயக்கத்தில் இருந்து வருகிறேன்.  முதலில் செயலராக இருந்தேன். பிறகு தலைவி ஆனேன்.  இடையே கணவர் பணி நிமித்தமாக சிங்கப்பூர் போக வேண்டியிருந்ததால், இடையே சிறிது காலம் மட்டும் இன்னர் வீலில் இருக்கவில்லை.  பின்னர் சிங்கப்பூர் இன்னர் வீல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றி வந்தேன்.  பிறகு சென்னை திரும்பியதும் புது வேகத்துடன் செயல்பட முடிந்தது.

சரி, இன்னர் வீல் மூலம் என்னென்ன பணிகள் செய்திருக்கிறீர்கள்?

இந்தப் பதினெட்டு வருடங்களில் இன்னர் வீல் பல துறைகளில் பாடுபட்டு வந்திருக்கிறது.  முதலில் வொகேஷனல் டிரெயினிங் எனப்

படும் கைத்தொழில் பயிற்சியை, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள பார்பரா கெல்லி ஹோமில், ஏழு லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பித்தோம்.  தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் பா. வளர்மதி இதைத் துவக்கி வைத்தார். பெண்களுக்கான தையல் தொழில் பயிற்சி, சிறுமிகளுக்கான கணினி பயிற்சி முதலியவற்றை இங்கே சொல்லிக் கொடுத்தோம். 

அடித்தட்டு மக்களின் குழந்தைகள்

விமானத்தைப் பார்க்காதவர்கள்கூட இருப்பார்கள்.  ஆனால் அவர்களில் பலரை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொண்டு பயணம் செய்து விட்டு வரும் அனுபவத்தைத் தந்தோம்.  "கனவுப்

பயணம்' என்ற அந்த நிகழ்ச்சியில் 9 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  அவர்களுடன் ராஜஸ்தான் முதல்வர் விஜயராஜே சிந்தியாவும், நடிகை பானுப்ரியாவும் கலந்து கொண்டார்கள். வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அனுபவமாக இருந்தது அந்த நிகழ்ச்சி.

கன்ஸ்யூமர் அவேர்னஸ் எனப்படும் நுகர்வோர்  விழிப்புணர்வு நிகழ்ச்சியை அடிக்கடி நடத்தியிருக்கிறோம்.  நூற்றைம்பது பெண்மணிகள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.  அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்குக் கூரை அமைத்துக் கொடுக்கும் பணியை மேற்கொண்டோம்.  சமுதாயத்தின் அடித்தளத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி, மருத்துவ உதவிகள் அளித்து வருகிறோம். பார்வையற்றோர் பள்ளிக்கு பிரெயில் கருவிகள் கொடுத்து உதவியிருக்கிறோம். பெண்கள் பலருக்கு நர்சிங் பயிற்சியும் அளித்தோம்.

சமூக நலத்தில் அக்கறை கொண்ட மனோ பக்தவத்சலம், அனிதா ரத்னத்தின் தாயார் லீலா ரத்னம், கமலா ராமகிருஷ்ணன் ஆகியோர் எங்கள் இன்னர் வீல் மூலம் நிறையப் பொதுத் தொண்டு ஆற்றி வந்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.