தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நம்பிக்கைகளைத் தகர்க்கும் புதிய ஆலோசகர்!

வருடக் கணக்காக நாம் நம்பி வந்திருக்கும் சில மித்துகளை ஒரே சொற்பொழிவில் தகர்த்துவிட்டார் எழுத்தாளரும், பேச்சாளரும்

News image
Updated On :5 ஏப்ரல் 2016, 8:01 am

சாருகேசி

வருடக் கணக்காக நாம் நம்பி வந்திருக்கும் சில மித்துகளை ஒரே சொற்பொழிவில் தகர்த்துவிட்டார் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆன ருஜுதா திவேகர்.  இவர் இந்தியாவின் பிட்நெஸ் நிபுணர்களில் முதல் வரிசையில் இருப்பவர்.  இந்தியப் பயிற்சியாளருக்கான சிறப்புப் பரிசு பெற்றவர்.  ஆசிய காஸ்ட்ரோ என்டராலஜி அமைப்பிடமிருந்து சத்துணவு (நியூட்ரிஷன்) விருது பெற்றவர்.  விளையாட்டு, விஞ்ஞானம் மட்டுமல்லாமல் யோகாசனப் பயிற்சிகள் அளிப்பதிலும் கெட்டிக்காரர். 

முக்கியமாக வடஇந்திய நடிகை கரீனா கபூரின் ஃபிட்னஸ் குழு. சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் முதலில் அவர் பேசிய போது, அவர் சொன்ன எல்லாமே நாம் இதுவரை நம்பி வந்த நம்பிக்கைகளைத் தகர்ப்பதாக இருந்தன:

அரிசி சாப்பிடுங்கள்.  தப்பே இல்லை.  அரிசியில் நிறைய குளோகோஸ் சத்து இருக்கிறது.  அது மூளைக்குப் போய் நன்றாக வேலை செய்கிறது. அதனால்தான் அரிசி சாதம் சாப்பிடும் சென்னைக்காரர்கள் அதிக புத்திசாலிகள் என்று பெயர் பெற்றிருக்கிறார்கள்.   கைக்குத்தல் அரிசி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  உலக்கையால் இடித்து உமியை விலக்கிவிட்டுக் கிடைக்கிற அரிசி.  இது உடம்புக்கு நல்லது.

ருஜுதாவைக் கேட்க வந்த கூட்டம் அதிகமாகிக் கொண்டே போயிற்று.   போட்டிருந்த நாற்காலிகள் நிறைந்து போய், சிலர் கும்பல் கும்பலாக நிற்கத் தொடங்கினார்கள்.   தாம் சொல்ல வரும் கருத்தில் முழு நம்பிக்கை வைத்து, அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அசாத்தியமான பேச்சாளராக இருக்கிறார் ருஜுதா திவேகர்.

எல்லோரும் அரிசிச் சாதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.  கோதுமை சாப்பிடுங்கள் என்றெல்லாம் உபதேசம் செய்துவரும்போது, ருஜுதா முற்றிலும் மாறுபட்டு, அரிசிச் சாதம் சாப்பிடச் சொல்கிறார்.

எல்லோரும் நெய் அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும்போது, நிறைய நெய் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ருஜுதா.  அது ஒன்றும் கொழுப்பு இல்லையாம்.  உடம்புக்கு நல்லது என்கிறார்.  மாறாக, நெய்யைச் சேர்த்துக்கொண்டு அதற்கு ஏற்ற உடற்பயிற்சி செய்தால் போதும் என்கிறார்.

தேங்காய் சேர்த்துக் கொள்ளாதீர்கள் அதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகிவிடும் என்று சிலர் பயமுறுத்துவார்கள்.  ருஜுதா, நிறைய தேங்காய் சாப்பிடுங்கள்.  தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.    சாப்பாட்டில், அப்பளம்  பொரிப்பதில் எல்லாம் சேர்த்துக் கொள்ளச் சொல்லுகிறார்.

கார்போஹைடிரேட் (மாவுச் சத்து) நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைத் தருகிறது.  நார்ச்சத்தையும் தருகிறது.  நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிதானமாகக் கலக்கச் செய்து நம் உணவிலுள்ள க்ளைசிமிக் அளவைக் குறைக்கச் செய்கிறது என்று சொல்கிறார். மாவுச்சத்தை உண்ணுங்கள். உங்கள் உடம்பில் அதிகமாகச் சேரும் கொழுப்புச்சத்தையும் அது எரித்துவிடும். கரும்பு தின்னுங்கள்.  அதைக் கடித்துத் தின்று சாறைப் பருகுங்கள் என்கிறார்.  உடம்புக்கும் நல்லது; பல்லுக்கும் நல்லதாம்.

நிறைய நடக்கச் சொல்கிறார். வாரத்துக்கு 150 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என்கிறார்.  லிப்ட் இருந்தாலும் படியேறிப்போக முயலுங்கள். அருகே இருக்கும் இடத்துக்கு நடந்து செல்லுங்கள்.  நடைப் பயிற்சியும், உடற் பயிற்சியும் உடலுக்குத் தேவை என்கிறார் ருஜுதா.  உட்கார்ந்தே இருக்கக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.   

புகழ் பெற்ற வட இந்திய நடிகை கரினா கபூர் இவருடைய பிட்னஸ் ஆலோசகர்.  "ருஜுதா என் உடலில் மட்டும் மாற்றம் செய்யவில்லை.  என் மனதிலும் ஆத்மாவிலும் கூடத்தான்.  என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயம் நான் அவரைச் சந்தித்ததுதான்' என்கிறார் கரினா கபூர்.

இவர் எழுதிய உடல் எடைக் குறைப்பு நூலும், "பயிற்சியால் பயனடை' நூலும் இப்போது தமிழிலும் விற்பனைக்கு வந்துவிட்டன.  (அதுதான் தமிழ்நாட்டுக்கு வரக் காரணமோ)  அவுட் லுக் பத்திரிகையும், பெமினாவும் இவர் நூல்களை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.