மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

தமிழ்ச் சிறுகதைகளில் பெண்கள்!

இன்றைய சமூகத்தில் பெண்கள் போகப் பொருளாகவோ அல்லது சோகக் கருவாகவோதான் காட்சியளிக்கிறார்கள் என்பது பெருமளவுக்கு உண்மைதான்.

Updated On :

இன்றைய சமூகத்தில் பெண்கள் போகப் பொருளாகவோ அல்லது சோகக் கருவாகவோதான் காட்சியளிக்கிறார்கள் என்பது பெருமளவுக்கு உண்மைதான். தமிழ்ச் சிறுகதைகளிலும் பெண்கள் அதுபோன்றே சித்திரிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மைதான்; இதையொட்டி, பெண்களைப் பற்றிய தமிழ்ச் சிறுகதைகள் பெரும்பாலும் பெருமளவிற்கு யதார்த்தத்தில்தான் நிலைகொள்கின்றன என்ற தீர்மானத்திற்குக்கூட வர முடியும். ஆனால், அதுபோன்றதொரு தீர்மானம் உள்ளீடற்ற ஒற்றைப் பரிமாணப் பார்வைகளின் (நண்ய்ஞ்ப்ங் க்ண்ம்ங்ய்ள்ண்ர்ய் - ர்ன்ற்ப்ர்ர்ந்) அடிப்படையிலேயே அமைகின்றன - (அதுபோன்ற தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்த சிறுகதைகளைப் போலவே!) - என்பது தெளிவாவதற்கு தீவிர இலக்கிய மாணவனுக்கு அதிக நேரம் எடுக்காது.

 கடந்த முப்பது - நாற்பதாண்டுகால தமிழ்ச் சிறுகதைகளில் பெண்களின் சற்றே பரிதாபமான நிலை பற்றி சரியான பார்வையும்; ஆரவாரம், வறட்டுக் கூச்சல் ஆகியவை முற்றிலும் நீக்கிய தொனியும் கொண்டது என்று, இலங்கை எழுத்தாளரான ஜெபம் பவதாரிணியின் சிறுகதையைத்தான் குறிப்பிட முடியும்.

 ஜெபம் பவதாரிணியின் கதையில் ஓர் ஆண் தனது காதலிக்காக சகோதரியைத் தியாகம் செய்கிறான்; இன்னொரு ஆண் சகோதரிக்காக தனது காதலியைத் தியாகம் செய்கிறான். இந்த இரண்டு - ""தியாகங்களிலும்'' (?) தியாகப் பொருளாக - அதாவது பலிகடாவாக - ஆவது ஒரு பெண், ஒரே பெண் என்கிற கதையின் மையக் கருத்து வாசகனை நெற்றிபொட்டில் தாக்குகிறது. இந்தக் கையறு நிலைதான் இன்றைய பெண்களின் நிலை. இந்த நிலைக்கு மாற்றாக, மருந்தாக யோசனைகள் வழிவகைகள் சொல்கிற கதைகள் தமிழில் இனிமேல்தான் எழுதப்பட வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

 வழிவகைகள் சொல்வதான பாவனையுடன் போலிப்பரிவுடன் ஏராளமான கதைகள் இங்கு எழுதப்பட்டிருக்கின்றனதான். ஆனால் அவையாவும் எழுத்தறிவு, படிப்பறிவு பெற்று பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக வார, மாதப் பத்திரிகைகளைப் படிக்கின்ற பெண்களைக் கவர்வதற்குச் செய்யப்படும் முயற்சிகள் மட்டுமே! சோகக் கதைகளின் லட்சணமே இப்படி என்றால், பெண்களைப் போகப் பொருளாகச் சித்திரித்து எழுதப்படும் படைப்புகளைப் பற்றிப் பேசவே வேண்டாம்!!

 யோசித்துப் பார்த்தால், அல்லல்படும் பெண்கள் இவர்கள் இல்லை. செங்கற்களுடன் சேர்த்து மேஸ்திரிகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள கட்டடத் தொழில் பெண்கள்; ஒருவேளை உணவிற்காக நாள் முழுவதும் வயல்வெளியில் பாடுபடும் பெண்கள்; மதியம் இரண்டு மணி வெயிலில் துவங்கி இரவு பத்து மணிவரை பூ விற்கிற பெண்கள்; சாயம் போன தாவணியும் கையில் ப்ளாஸ்டிக் வளையுமென "பத்தடிக்கு பத்தடி' விஸ்தீரணத்தில் பனியன், ஜட்டி என்று உள்ளாடைகள் விற்கிற கடைகளில் தினம் பத்து மணிநேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் - இவர்களைப் பற்றிய சிறுகதைகள் தமிழில் இதுவரை எவ்வளவு தீவிரத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதற்கு விடை கண்டறிய பெரும் ஆராய்ச்சி தேவைப்படாது.

 படிப்பறிவு அதிகமற்ற ஏழைப் பெண்களுக்கு மட்டும்தான் பிரச்னைகள்; படித்த பெண்களுக்கு பிரச்னைகளில்லை என்பதல்ல என் வாதம். படித்த பெண்கள், வாழ்க்கையில் ஓரளவு வாய்ப்புகள் பெற்ற பெண்களின் பிரச்னைகள் வேறுவிதமானவை. நான் படித்த வரையில் இதைச் சரியாகச் சித்திரித்த ஒரு (ஒரே?) சிறுகதை "பட்டஞ்சுட்டி' என்ற தலைப்பில் ஸýஜாதா விஜயராகவன் எழுதிய சிறுகதையாகும். வெளிநாடு சென்று மேலும் படித்துத் தன்னை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிற (பொறியியல்?) பட்டதாரி கதாநாயகிக்கு, அதிநவீன காரில் வந்து இறங்குகின்ற டாக்டராகப் பணிபுரிகிற தூரத்து சொந்தக்காரனான இளைஞனைக் கண்டதும் மனம் பேதலிக்கிறது. இந்த டாக்டர் இளைஞனுக்கும் கதாநாயகிக்கும் திருமணம் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் சிறுகதையில் முன்னரே கூறப்பட்டிருக்கின்றன. டாக்டர் இளைஞன் காரில் வந்து இறங்கும்போது கதாநாயகி மனம் குழம்புவதுடன் கதை முடிகிறது.

 இந்தப் பெண் மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றால் அங்கு செய்யப்பட வேண்டிய கடும் உழைப்பில் இந்த டாக்டருக்காக ஏங்கி மனம் குழம்புவாள்; டாக்டரை மணந்து குடும்ப வாழ்வின் தினசரித் தன்மையில் உழலத் துவங்கும்போது நழுவவிட்ட தன் மேற்படிப்பை நினைத்துக் குழம்புவாள். படித்த பெண்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை (ஊழ்ங்ங்க்ர்ம் ர்ச் இட்ர்ண்ஸ்ரீங்)உண்டு. ஆனால், தேர்ந்தெடுக்கும் உரிமையிலிருந்து விலக்கு(ஊழ்ங்ங்க்ர்ம் ச்ர்ழ்ம் இட்ர்ண்ஸ்ரீங்) கிடையாது எனும் உண்மை ஸýஜாதா விஜயராகவனின் சிறுகதையில் நெற்றிப்பொட்டிலடிக்கிறது. ஜெபம் பவதாரிணியின் சிறுகதை இன்னொருதளத்தில் செய்ததுபோலவே. வேறொரு கோணத்தில் பார்ப்பதென்றால், படித்த பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பும் வேண்டும்; சுதந்திரமும் வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாற்றங்கள் அடைவது சற்று பரிதாபமானதுதான்!

 மற்றபடி ஜோதிர்லதா கிரிஜா, அம்பை போன்ற "அறிவுஜீவி பெண்ணெழுத்தாளர்கள்'கூட பெண்களின் உண்மையான பிரச்னைகளை இனம் கண்டு தமிழ்ச் சிறுகதைகளை உருவாக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் எதிர்வரும் காலங்களில் ஜெபம் பவதாரிணி, ஸýஜாதா விஜயராகவன் போன்ற படைப்பாளிகள் பல்கிப் பெருகுவார்கள் என்கிற நம்பிக்கை மட்டும்

எப்படியோ என்னுள் இன்னும் பசுமையாக இருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.