தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நீதியே வெல்லும் என்ற விதுர நீதி!

கலாக்ஷத்ராவின் தலை சிறந்த மாணவியாகத் திகழ்ந்து, அதன் முதல்வர் ஆனவர் கிருஷ்ணவேணி லக்ஷ்மணன். அவருடைய மகளும் மாணவியுமான காயத்ரியும் மருமகன் பாலகுருநாதனும் இணைந்து வழங்கிய "விதுர நீதி'யை ஒரு நடன நாடகம் என்று சொல்லலாம். 

News image
Updated On :22 மார்ச் 2016, 7:05 am

சாருகேசி

கலாக்ஷத்ராவின் தலை சிறந்த மாணவியாகத் திகழ்ந்து, அதன் முதல்வர் ஆனவர் கிருஷ்ணவேணி லக்ஷ்மணன். அவருடைய மகளும் மாணவியுமான காயத்ரியும் மருமகன் பாலகுருநாதனும் இணைந்து வழங்கிய "விதுர நீதி'யை ஒரு நடன நாடகம் என்று சொல்லலாம். 

Story image

எல்லோருக்கும் தெரிந்ததுதான் மகாபாரதம்.  ஆனால் அதன் முக்கிய பகுதியான உத்யோக பர்வத்தில், தருமத்தை எடுத்துச் சொல்லும் விதுரான் கேள்வி-பதில் உரையைப் பாடலாக்கி, பாட்டுக்கெல்லாம் மெட்டமைத்து, நடன வடிவத்தில் வழங்குவது கொஞ்சம் சிரமமான, சிக்கலான பணிதான்.  அதை சாத்தியமாக்கிய காயத்ரி பாலகுருநாதனுக்கு முதலில் வாழ்த்துச் சொல்வதுதான் முறை.  இதில் இரண்டு பேரின் பங்கு மிகவும் சவாலானது.  ஒருவர் இதை மேடையில் நடனமாக வழங்கலாம் என்று கூறி, காட்சிகளாக வடிவமைத்துக் கொடுத்த டாக்டர் சுதா சேஷய்யன்.  இரண்டாமவர் நடனத்துக்கும் பாடலுக்கும் ஏற்றவாறு இசையமைத்த கெட்டிக்கார மனிதர் ராஜ்குமார் பாரதி.  எத்தனை வாத்தியங்கள்  எத்தனை ராகங்கள்  கர்ண ரஞ்சனியாவது கேள்விப்பட்ட ராகம்.  குருப்யா கேட்டதுண்டா ருத்ரகாந்தா கேட்டதுண்டா? 

மொத்தம் பத்துக் காட்சிகளில் விதுர நீதியை வழங்கினர் காயத்ரி-பாலகுருநாதன். உறக்கம் வராமல் தவிக்கும் திருதிராஷ்ட்ரனிடம் அவன் நிலை பற்றி வருந்துகிறார் விதுரர். துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் ஆகியோரிடம் அரசை ஒப்படைத்தால் உறக்கம் வருமோ என்பது விதுரன் வினா. 

கணவர் திருதிராஷ்ட்ரன் சகோதரர் பாண்டுவுக்கு மகன் பிறந்துவிட்ட பொறாமையில், கருவுற்ற தன் வயிற்றை உலக்கையால் காந்தா இடித்துக்கொள்ள, 100 பேர் கௌரவர்களாகப் பிறக்கிறார்கள்.  அவர்களும் பொறாமையோடு தீமையின் வடிவங்களாக இருக்கிறார்கள். சகுனியின் தவறான யோசனைகளும் சேர்ந்து கொள்கின்றன

குரு துரோணருக்கோ, பாஞ்சால நாட்டு துருபதனால் ஏமாற்றப்பட்ட கோபம்.  துருபதனைப் பழி வாங்க அர்ஜுனனைத் தயார் செய்கிறார் துரோணர். குருவானாலும் வேறுபாடு பாராட்டும் துரோணர், ஏற்கெனவே ஏகலைவனுக்குக் கொடுமை இழைத்தவர். 

அரக்கு மாளிகைக்குப் பாண்டவர்களை அழைத்து, அவர்களை அழிக்கத் திட்டமிடும் கௌரவர்கள், அவர்களை அங்கே அழைத்துச் செல்லும் பொறுப்பை விதுரருக்குக் கொடுக்கிறார்கள்  விதுரர் சூட்சுமமாக அங்கே இருக்கிற ஆபத்துகளை அவர்களுக்குச் சொல்லிவிடுகிறார்.  பாண்டவர்கள் தீ விபத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

திரௌபதியின் சுயம்வரத்தில் பல மன்னர்கள் பங்கு கொள்ள, கொடையாளி கர்ணனும் கலந்து கொண்டு தோற்கிறான்.  ஆனால் அர்ஜுனன் வெல்கிறான். 

பயங்கரமான கட்டம், சூதாட்டக் காட்சி.  எல்லாவற்றையும் இழந்து, திரௌபதியையும் இழக்கிறார் தருமர்.  கௌரவர்களிடம் தர்மத்தை எடுத்துச் சொல்கிறார் விதுரர்.  துரியோதனனா கேட்பான்  - அவரை ஏசுகிறான். 

நிச்சயம் போர் மூளத்தான் போகிறது என்று எச்சரிக்கிறார் விதுரர்.

வனவாசத்தின்போது ஞானம் பெற்று, பலம் பொருந்தியவர்களாகிறார்கள் பாண்டவர்கள்.  துர்வாசருக்கு அட்சயபாத்திரத்தில் அமுது படைப்பது, பரமசிவனிடம் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறுவது, சௌகந்திக மலரைத் தேடிச் செல்லும் பீமனை ஆஞ்சநேயர் தடுத்தாட்கொள்வது என்று நடனக் காட்சிகள் நகர்கின்றன.

விராட தேசத்தில் பாண்டவர்கள் ஓராண்டு கழிக்க, பீமன் கீசகனை வதம் செய்கிறான். அடுத்து வருகிறது குருúக்ஷத்திரப் போர். கௌரவர்கள் எல்லோரும் பலியாகிற பதினெட்டு நாள் போர். இறுதியில் எல்லாவற்றுக்கும் நீதியே அடித்தளம், நீதியே நிலைக்கும், நீதி அழிவற்றது என்ற பாடம்.

விதுர நீதி ஒரு த்ரி-இன்-ஒன் படைப்பாகத்தான் இருந்தது.  நடு நடுவே சம்ஸ்கிருதத்தில் சுலோகங்கள், இடை இடையே தமிழில் பாடல்கள், ஒவ்வொரு காட்சிக்கும் அறிமுகமாக பி.சி. ராமகிருஷ்ணாவின் அசத்தும் ஆங்கில முன்னுரைகள்.  (தமக்கு விதுர நீதி தமிழில் கிடைத்தது என்று துவக்கத்தில் பாலகுருநாதன் சொன்னாரே, அதையே முழுதும் பின்பற்றியிருக்கக் கூடாதோ) நீண்ட ஜதிக் கோர்வை . சரி, அதை அனாயாசமாக காயத்ரியும் பாலகுருநாதனும் சோர்வின்றி வழங்கிய விதமும் சரி, நன்றாகவே இருந்தன. 

ஆனால் அறிமுக ஜதியில் இத்தனை நீளம் இருக்க வேண்டுமா (இன்னொரு காட்சியில் மேடை வெறுமையாக இருக்க, பாடல் மட்டும் ஒலித்தது)

நடன அமைப்பைப் பற்றி அப்பழுக்குச் சொல்ல முடியாது. வேகமும் விறுவிறுப்பும் எல்லா காட்சிகளிலும் போட்டி போடுகின்றன.  அப்படி உழைத்திருக்கிறார்கள்.  பாடல்களோ செவிக்கு இனிமையாக இருக்கின்றன. கிருஷ்ணவேணி லக்ஷ்மணனுக்கு அஞ்சலியாக அமைந்த இந்த நிகழ்ச்சி, அவர் பெயருக்குப் பழுதில்லாமல் அமைத்திருக்கிற திருப்தியை மகளுக்கும் மருமகனுக்கும் அளித்திருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.