

* குளிர் காலத்தில் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பைப் பயன்படுத்தலாம். சோப்பைத் தவிர்த்து பால், தயிர் போன்றவற்றை உடல் முழுவதும் தேய்த்தும் குளிக்கலாம்.
* உணவில் பால், பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சீசனில் ஜீரணம் தாமதமாகும் என்பதால் கொழுப்பு மிக்க உணவுகளைத் தவிருங்கள்.
* குளிர் காலத்தில் வீட்டில் குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால் "சிலீர்' என்று குளிர் காலில் ஊடுருவும். இரவு நேரங்களில் காலில் சாக்ஸ் போட்டுவிட்டால் குளிர் பாதிக்காது.
* குளிர் காலத்தில் காலை நேரங்களில் ஈரப்பதமும், பூக்களின் மகரந்தமும், பூஞ்சையும் காற்றில் அதிகமாகக் கலந்திருக்கும். எனவே, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகாலையில் நடைப்பயிற்சியைத் தவிர்த்து மாலையில் செய்யலாம்.
* குளித்து முடித்ததும் தரமான பாடி லோஷனைத் தடவலாம். அது தோலை ஈரப்பதமாக வைக்க உதவும்.
* பப்பாளி, ஆப்பிள் ஆகியவற்றை குளிர்காலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதும் சருமத்துக்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு உகந்தது.
* குளிர் காலங்களில் வெந்நீர் குளியல் இதம் தரும். ஆனால் அதிக சூடான தண்ணீர் சருமத்தை வறட்சியாக்கும். எனவே, வெதுவெதுப்பான சூட்டில் குளிக்கலாம்.
* இந்த சீசனின் மிகப்பெரிய பிரச்னை உதடு வெடிப்புதான். வெடித்த உதடுகளை நாக்கால் அடிக்கடி ஈரப்படுத்தாமல், "லிப் பாம்' பயன்படுத்தலாம்.
* குளிர் காலங்களில் வெயில் மிகவும் இதமாக இருக்கும். ஆனால் தோலை வறட்சியாக்கும். எனவே, வெயிலில் செல்வதற்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோசனைத் தடவலாம்.
* காலில் உள்ள பித்த வெடிப்புகள் குளிர்காலத்தில் அதிக வலியைக் கொடுக்கும். காலை வெதுவெதுப்பான தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து, தேய்த்துக் கழுவிய பின்பு, வெடிப்புக்கான க்ரீம்களைத் தடவி வந்தால் குணம் கிடைக்கும்.
* கூந்தல் வறட்சியாக இல்லாமல் இருப்பதற்கு, குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு உச்சந்தலையில் எண்ணெய் வைத்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
* உச்சந்தலையோடு சேர்த்து கூந்தலின் நுனி வரை எண்ணெய் தேய்த்துத் குளித்தால் முடியில் வெடிப்பு விழாமல் இருக்கும்.
- கீதா ஹரிஹரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.