கொழுத்த சரீரமுள்ளவர்கள் சதை குறைந்து ஒல்லியாகக் காட்சியளிக்க, காலையில் ஒரு டம்ளர் அளவு வெள்ளரிச் சாறு அருந்தலாம்.
மதிய உணவில் வெள்ளரிக்காய்த்துண்டுகளைத் தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். பெரிய வெள்ளரிக்காயை மிக்ஸி மூலம் சாறாக மாற்றியும் அருந்தலாம். மதிய உணவில் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ அல்லது பச்சடியாகவோ சாப்பிடலாம்.
மேனிக்கு பொன்நிறத்தைக் கொடுக்கும் சிலிகான் உப்பு, ஒவ்வோர் உயிர்செல்லையும் வலிமையாகப் பிணைத்து வைக்கிறது. இதனால் முதுமையிலும் கட்டுடலாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்நாள் தொடரும். தசை நார் வலிமையுடன் நீடிக்க சிலிகான் உப்பு தேவை. குதிகாலைப் பிணைக்கும் தசை, குருத்தெலும்பு மற்றும் எலும்பு -இவையெல்லாம் ஆரோக்கியமாகவும், தசை நார்கள் உறுதியாக இருக்கவும் வெள்ளரிக்காயிலுள்ள சிலிகான் உப்பு உதவுகிறது.
வெள்ளரிக்காயிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து முதலியவை ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தி, பக்கவாதத்தைத் தடுத்து விடுகிறது.