இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-14
மரத்தினால் செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு எந்த மாதிரியான சுயதொழிலை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று சொல்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமா ராஜ்.


மரத்தினால் செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு எந்த மாதிரியான சுயதொழிலை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று சொல்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமா ராஜ்.
மியூரல் பெயின்டிங்: இது மர பிளைவுட் கொண்டு செய்யக் கூடியது. மர பிளைவுட் என்றவுடன் பெரிதாக இருக்குமோ என பயப்படத் தேவையில்லை. இது சுவரில் மாற்றக் கூடிய அலங்காரப் பொருளாகும். இதனை நமக்கு தேவையான வடிவில் சதுரமாகவோ, வட்டமாகவோ, வெட்டி வாங்கி வர வேண்டும். அதில் பிளாஸ்டோ பாரீஸ், பெவிக்கால், தண்ணீர் கலந்து சுண்ணாம்பு அடிப்பதுபோன்று அடிக்கவும். பின் நடுப் பகுதியில் நமக்கு தேவையான கடவுள் உருவங்கள், இயற்கை காட்சிகள் போன்றவற்றை ஒட்டவும். பின்னர், ஆயில் பெயிண்டிங் கொண்டு வண்ணம் தீட்டலாம். இதேப்போன்று நிறைய டிசைன்கள் நம் கற்பனைக்கு தகுந்தபடி செய்து விற்பனை செய்யலாம்.
பேனா ஸ்டாண்ட்: மரத் துண்டுகளை வாங்கி வந்து நமது கற்பனைக்கு ஏற்ற வகையில் பல வடிவங்களில் செய்யலாம். அல்லது மெலிதாக சிறுசிறு துண்டுகளாக நீள் வடிவில் வெட்டி பின் அதை வட்டமாகவோ, சதுரமாகவோ பேஸ் வைத்து ஒட்டி அழகுப்படுத்தலாம். இதனை பரிசு பொருளாக முதலில் கொடுங்கள் பின் அதையே விற்பனை செய்யலாம்.
டிரஸ்ஸிங் டேபிள் அலங்கரிக்க: சீப்பு ஸ்டாண்ட் செய்து தரலாம். பிறந்தநாள் பார்ட்டிக்கும், கல்யாணங்களுக்கும் ரிட்டன் கிப்ட் கொடுக்கலாம்.
கீ செயின்: சாவி கொத்து மாட்ட பெரிதாகவோ, சின்னதாகவோ வேண்டிய அளவில் பல வித வடிவில் பிளைவுட்டில் வெட்டி டிசைன் செய்து முன்பக்கம் சாவிக் கொத்து மாட்டுவதற்கு கொக்கி அடித்து தரலாம். இதில் அவரவர் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு வேலை உண்டு. சமீபகாலமாக கல்யாணம் போன்ற விசேஷ வீடுகளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பிளவுஸ் பிட் வைத்து தருவது இல்லை. இதுபோன்ற கைவேலைப்பாடு செய்த பொருள்களையே தருகிறார்கள். அதனால் விசேஷ வீடுகளை அணுகி அவர்களிடம் மொத்தமாக ஆர்டர் பிடித்து கீ செயின் செய்து தரலாம் .
சீர் வரிசை தட்டு: முன்பு எல்லாம் மூங்கில் கூடை, பிளாஸ்டிக், ஸ்டீல் தட்டுகளில் சீர் வரிசை பொருள்களை வைத்து மேலே பேக்கிங் பேப்பர் ஒட்டுவர். ஆனால், தற்போது மர பிளைவுட்டில் மயில், அன்னம் போன்று பல வடிவங்களில் டிசைன் செய்யப்பட்டு வண்ணம் தீட்டி அழகழகாக வரிசை தட்டு செய்யப்படுகின்றது. எனவே, மரத் துண்டுகளை வாங்கி வந்து நமக்கு தேவையான வடிவில் வெட்டி சீர்வரிசை தட்டுகள் செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
ஜுவல்லரி: மரத்தினால் ஆன மணிகள் வைத்து நமக்கு பிடித்தமான நகைகள் செய்யலாம். ஏற்கெனவே ரெடிமேட் நகை செய்பவர்களுக்கு பயிற்சி தேவையில்லை. அதேபோன்று இதையும் வடிவமைக்கலாம். மரத்தினால் செய்யப்பட்ட மணிகள் தற்போது பல வண்ணங்களில், வடிவங்களில் ரெடி மேடாக கடைகளில் கிடைக்கின்றன அவற்றையும் வாங்கி வந்து தயார் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யலாம். கல்லூரி பெண்களிடம் இதுபோன்ற மர நகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, நல்ல லாபம் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...