ஆரோக்கிய உணவுகள்: சாமை பாயாசம்
முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து வைக்கவும். அடிகனமுள்ள பாத்திரத்தில் சாமை அரிசியை இட்டு போதிய அளவு நீர் சேர்த்து வேக விடவும்.


தேவையானவை:
சாமை அரிசி - 1/4 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய்ப்பால் - 1/2 கிண்ணம்
நெய் - 3 மேசைக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து வைக்கவும். அடிகனமுள்ள பாத்திரத்தில் சாமை அரிசியை இட்டு போதிய அளவு நீர் சேர்த்து வேக விடவும். அரைப்பதம் வெந்ததும், வெல்லத்தைப் பொடித்து கொதிக்க வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து தொடர்ந்து வேக விடவும். இடைஇடையே நெய்யை ஊற்றி, நன்கு கிளறவும். கலவை பாயாசம் பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். சாமையில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துகள் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும். புரதம் உடம்புக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...