அதற்குள் என்னுடைய ஆக்ஸிஜன் மாஸ்க் மீண்டும் வேலை செய்ய தொடங்கியது. 15 நிமிடங்களுக்குள் நானும் மேலே சென்று, உணர்ச்சி வசப்பட்டு என் மகளை அணைத்துக் கொண்டேன். ஒரே நேரத்தில் இருவரும் ஒன்றாக மலை உச்சிக்கு சென்றடைய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், முதன்முதலாக தந்தையும், மகளும் இமயமலை மீது ஏறி சாதனை படைத்துவிட்டோமே என்ற ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. உடனே தேசிய கொடியை எடுத்து பெருமையுடன் ஏற்றி சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். எங்களை பொருத்தவரை இது ஒரு மறக்கமுடியாத பயணமாகும். நம்பிக்கையும், பொறுமையும் எங்களை சாதனையாளர்களாக மாற்றியது'' என்றார்.