தொடக்கம் முதல் இறுதி வரை கண்களை இமைக்க விடாமல் படம் பார்க்க வைக்கும் "இமைக்கா நொடிகள்' படத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது "திக்' .. திடுக்' திரைக்கதை, நடிப்பால் அசத்திய நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், இயக்குநர் அஜய் ஞானமுத்து. இந்தப் பட்டியலில் அடுத்து சேர்பவர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்த புதிய வரவான ராஷி கன்னா.
பார்க்க ரஷ்ய அழகி போல இருக்கும் ராஷி கன்னா, சிந்து நதி பாயும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பம். படித்தது டில்லியில். ஆங்கில இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்.
மாடல், பாடகி, நடிகை என்ற தளங்களில் இயங்கி வந்தாலும் தற்போது முதலில் நடிப்பு பிறகு மாடலிங் அப்புறம் தான் பாடுவதற்கு ஒப்புக் கொள்கிறார். 2013- ஆம் ஆண்டு வெளியாகிய "மெட்ராஸ் கஃபே' ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமான ராஷிக்கு தொடர்ந்து சிவப்பு கம்பளம் விரித்தது தெலுங்கு பட உலகம்.
ராஷி நடித்து முதலில் தெலுங்கில் வெளியான திரைப்படம் "மனம்'. சின்ன வேடத்தில் நடித்திருந்தார். தொடக்கத்தில் ராஷி தெலுங்கில் நடித்த திரைப்படங்களில் பெரும்பாலானவை வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவின. நல்லவேளை... ராஷி ராசியில்லா நடிகை என்று யாரும் முத்திரை குத்தவில்லை.
ராஷி தெலுங்கில் நடித்த "சுப்ரீம்', "பெங்கால் டைகர்', "ஜில்' போன்ற படங்கள் வெற்றியை அள்ளித்தந்தன. ஜூனியர் என்டிஆருடன் ராஷி நடித்த "ஜெய் லவ குசா' திரைப்படம், ராசியை புகழ் ஏணியின் உச்சத்தில் ஏற்றி விட்டுத்தான் ஓய்ந்தது. இடையே ராஷி மோகன்லாலுடன் "வில்லன்' மலையாளப் படத்திலும் நடித்து முடித்தார். "வில்லன்' படத்தில் நடிகர் விஷாலும் நடித்திருந்தார். படத்தில், ராஷி போலீஸ் பாத்திரத்தில் சும்மா மிரட்டியிருந்தார்.
"ஆக்ஸிஜன்', "டச் சேசி சூடு', "டோலி பிரேமா', "சீதாராம கல்யாணம்' உள்ளிட்ட தெலுங்கு படங்களில் வலம் வந்திருக்கும் ராஷி தமிழுக்கு "இமைக்கா நொடிகள்' மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
"சொல்லப்போனால் எனது முதல் தமிழ் வெளியீடு சித்தார்த்துடன் நடிக்கும் "சைத்தான் கே பச்சா'வாகத்தான் இருந்திருக்கணும். இந்தப் படத் தயாரிப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படத்தின் வெளியீடு தாமதமானதால் "இமைக்கா நொடிகள்' முந்திக் கொண்டது. என்னை "இமைக்கா நொடிகள்' படத்திற்காக ஒப்பந்தம் செய்தபோது படத்தில் நயன்தாரா நடித்திருக்கும் பாத்திரமான சிபிஐ போலீஸ் அதிகாரி ஆண் பாலாக இருந்தது. அதற்குப் பொருத்தமான நடிகரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பிறகு பெண் சிபிஐ போலீஸ் அதிகாரியாக மாற்றப்பட்டது. நயன்தாரா ஒப்பந்தமானார். நயன், அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி படத்தில் நடித்து படத்திற்கு நட்சத்திர அந்தஸ்தினை வழங்கினார்கள். புகழ் பெற்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் நாமும் நடிக்கிறோம் என்று பெருமையாக இருந்தது. மாடலாக இருந்த நான் படத்தில் மாடலாக நடித்ததும் ஓர் அபூர்வ பொருத்தம்தான். "இமைக்கா நொடிகள்' படத்தில் ஒரு காட்சியில்கூட நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு அமையாதது ஏமாற்றம்தான். ஆனால் படம் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி'' என்கிறார் ராஷி.
இசையிலும் தீவிர ஆர்வம் உள்ள ராஷி மூன்று தெலுங்கு படங்களில் பாடல் பாடியுள்ளார். "வில்லன்' மலையாள படத்திலும் ஒரு "புரோமோ' சாங்கை ராஷி பாடி அசத்தியிருக்கிறார். ராஷி இன்ஸ்டாகிராமிலும் பிரபலம். அவரை சுமார் பதினெட்டு லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
ராஷிக்கு உடலைக் கட்டமைப்பாக வைத்திருப்பதில் அதிக அக்கறை உண்டு. அவர் உடற்பயிற்சி செய்யும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட போது வைரலாயின. ""இதுவரை சுமார் பதினேழு படங்கள் வெளியாகியுள்ளன. அதில் பதினைந்து தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டவை. ஜெயம் ரவி ஜோடியாக "அடங்க மறு' படத்திலும், விஷாலுடன் "அயோக்யா' படத்திலும் நடித்து வருகிறேன். இதனால் ஹைதராபாத்திற்கும் சென்னைக்குமாக பறந்து கொண்டிருக்கிறேன்'' என்று சொல்லும் ராஷி திருமணமானவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


