கமலை முந்திய நயன்தாரா..!

சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் கோலிவுட் திரையுலகின்  நடிகைகளில்  "சூப்பர் ஸ்டாராக' இருக்கும்  நயன்தாரா.
கமலை முந்திய நயன்தாரா..!
Updated on
1 min read

சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் கோலிவுட் திரையுலகின் நடிகைகளில் "சூப்பர் ஸ்டாராக' இருக்கும்  நயன்தாரா.  நாயகிக்கு  முதலிடம் கொடுத்து எழுதப்படும் திரைக்கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நயன்தாரா,  நயனின்  இந்த அணுகுமுறையை     ரசிகர்களும்  ஏற்றுக் கொண்டு ஆதரவு தந்து வருவதால்,  நயன் நடித்த  சமீபத்தில் வெளியான படங்கள் எல்லாம் வசூலையும் தந்து வருகின்றன.   உதாரணம்,  நயன் நடித்து  வெளிவந்த  "அறம்', "கோலமாவு கோகிலா', "இமைக்கா நொடிகள்'  நயன்தாராவை  நட்சத்திர அந்தஸ்திலிருந்து   சூப்பர் ஸ்டார்  நிலைக்கு உயர்த்தியுள்ளது.  இந்த சூழ்நிலையில் எல்லா நடிகர்கள்   நடிகைகள்  செய்வதை  நயன்தாராவும் செய்திருக்கிறார். சம்பளத்தை  உயர்த்தியிருக்கிறார்.  கிட்டதட்ட மும்பை நடிகைகள் வாங்கும் தொகையை அல்லது  அதைவிட  அதிகமாகவும்   நயன் வாங்க ஆரம்பித்திருப்பதாக  சொல்லப்படுகிறது.

2018-ஆம் ஆண்டின் பட்டியலை "ஃபோர்ப்ஸ்'  வெளியிட்டுள்ளது.   இந்த பட்டியலில் நயன்தாராவுக்கு தரப்பட்டிருக்கும் இடம்  69 . நயன்  இந்த ஆண்டு 15.17 கோடி ரூபாய் வருமானமாக  சம்பாதித்துள்ளார்  என்று  இந்தப் பட்டியலில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை   பிடித்திருப்பவர்கள் சல்மான்கான், விராட்   கோலி, அக்ஷய்குமார், தீபிகா படுகோன்,  தோனி  ஆவார்கள்.   இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்களில் ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், நயன்தாரா, கமல்ஹாசன். பட்டியலில்,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  11-ஆவது இடமும்,   ரஜினிகாந்திற்கு  14-ஆவது இடமும்,  விஜய்க்கு  26-ஆவது இடமும் , விக்ரமிற்கு  29-ஆவது இடமும், சூர்யாவுக்கு  34-ஆவது இடமும்,  தனுஷ்ஷிற்கு  53-ஆவது இடமும், நயன்தாராவுக்கு  69-ஆவது   இடமும், கமலுக்கு 71-ஆவது  இடமும் கிடைத்துள்ளது. இந்தப்பட்டியலில்  முதல் நூறு பேர் பட்டியலில் இதர  தமிழ்ப்பட    நடிகைகள் யாரும் இடம் பெறவில்லை.  இப்ப சொல்லுங்கள்  நயன்தாரா  பெண் சூப்பர் ஸ்டாரா இல்லையா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com