உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பிரண்டை!

வஜ்ஜிரவல்லி, சஞ்சீவி, அஸ்திசம்கார், கிரண்டை, அரிசிணி, சதுர்தாரா என்றெல்லாம் அழைக்கப்படும் பிரண்டை படரும் கொடி வகையை சார்ந்தது. 
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பிரண்டை!

வஜ்ஜிரவல்லி, சஞ்சீவி, அஸ்திசம்கார், கிரண்டை, அரிசிணி, சதுர்தாரா என்றெல்லாம் அழைக்கப்படும் பிரண்டை படரும் கொடி வகையை சார்ந்தது. 

ஒரே சீராக அல்லாமல் பிரண்டு பிரண்டு காணப்படுவதால் பிரண்டை என்றழைக்கப்படுகிறது. இதில் ஓலைப்பிரண்டை, முப்பிரண்டை, உருட்டுப்பிரண்டை, புளிப்பு பிரண்டை, நாற்சதுரப்பிரண்டை என பல வகைகள் உண்டு.
ஆண்பிரண்டையில் கணுக்கள் பெரியதாகவும், பெண் பிரண்டையில் கணுக்கள் சற்று அருகருகே அமைந்திருக்கும்.
பிரண்டையில் கூடுதலாக உள்ள சுண்ணாம்புச்சத்து(கால்சியம்) எலும்புகளுக்கு மிகுந்த வலிமையை கொடுக்கிறது. அதனால் தான் மனித உடலிலுள்ள நீள எலும்புகளின் வடிவத்தை ஒத்துள்ள பிரண்டை எலும்புகளின் நண்பன் என்றழைக்கப்படுகிறது.
எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
சவ்வுவிலகல், குறுத்தெலும்பு தேய்மானம், மூட்டு, முழங்கால், முதுகுத்தண்டு போன்ற எலும்பு தொடர்பான அத்துனை குறைபாடுகளையும் விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது பிரண்டை.
முறிந்த எலும்புகள் ஒன்றுகூடும் செயல்களை துரிதப்படுத்துகிறது.
பிரண்டையிலிருந்து தயாரிக்கப்படும் உப்பு சித்தமருத்துவத்தில் குடல் சார்ந்த நோய்க்கு பெருமருந்தாக பயன்படுகிறது. மூளைக்கு செல்லும் நரம்புகளை பலப்படுத்துகிறது. 
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வயிற்றுப்பொருமல் மற்றும் வாயுத்தொல்லைக்கு அருமருந்தாகிறது.
ரத்தமூலத்தை கட்டுக்குள் வைக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சூதகவலியை போக்கி நல்ல நிவாரணம் அளிக்கிறது.
இளம்பிரண்டைகளை  குழம்பு, துவையல், ரசம், வத்தல் என ஏதேனும் ஒருவகையில் சமையலில் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com