ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சின்னத்திரை மின்னல்கள்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை அஞ்சு.

News image
Updated On :9 டிசம்பர் 2020, 12:30 am

ஸ்ரீ

தேசிய விருது பெற வேண்டும்!


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை அஞ்சு. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "மகராசி' தொடரில் சாமூண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இத்தொடரில் இவரும் ஓர் அங்கமாகியிருக்கிறார். இது குறித்து அஞ்சு கூறியதாவது:

""ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்குள் வந்திருக்கிறேன். இந்த இடைவெளிக்கு காரணம், எனது மகனின் படிப்புகாக அவனுடன் இவ்வளவுநாள் வயநாட்டில் தங்கியிருந்தேன். இப்போது அவர், பிளஸ் டூ முடித்து விட்டார். அதனால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டோம்.

மீண்டும் நடிக்கலாமே என்று நினைத்தபோதுதான் "மகராசி' தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் சாமூண்டீஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கிறேன். ஒரு ஸ்ட்ராங்கான வில்லி, அதே சமயம் நகைச்சுவையும் கலந்திருக்கும் வித்தியாசமான கேரக்டர். இதில் எனக்கு தெரிந்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அதனால், செட்டில் புதுசா வந்திருக்கும் உணர்வு இல்லாமல் ஜாலியாக போகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன், அதனால் மீண்டும் பீல்டைவிட்டு போவதற்குள் ஒரு நல்ல படம் செய்து தேசிய விருது பெற வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதனால், அடுத்து நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

சிறு வயது முதலே பெட்ஸ் ரொம்ப பிடிக்கும். அதிலும் தெரு நாய்களை பார்க்கும் போதெல்லாம் அவைகளுக்கு பாதுக்காப்பான ஓர் இடம் தர வேண்டும் என்று நினைப்பேன். ஒரு நாள் நிச்சயம் அதை செய்வேன்'' என்றார்.

ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி!

Story image

சன்தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கியிருக்கும் தொடர் "திருமகள்'. இத் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் ஹரிகா சடு. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட தெலுங்குப் பெண் இவர். பி.இ. படித்திருக்கும் ஹரிகாவுக்கு சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்பது ஆசையாம். ஏற்கெனவே தெலுங்கில் "கல்யாணி' என்ற தொடரில் நடித்திருக்கிறார். இதன் மூலம் தான் தமிழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

"" தமிழில் "திருமகள்' எனக்கு முதல் தொடர். முதல் தொடரிலேயே போல்டான, துறு துறு பெண்ணாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது நிஜ கேரக்டரும் இதுதான். எனவே இந்த ரோலில் நடிப்பதில் அவ்வளவு சிரமம் தெரியவில்லை. தமிழ் தொடர் என்றதும் ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், சீரியல் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று சொல்லும் ஹரிகா, சோஷியல் மீடியாவில் மிகப் பிரபலம். இவரது டப் மேஷ், டிக்டாக் வீடியோக்களுக்காகவே தனி ரசிகர் வட்டம் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.