

நெல்லிக்காய் பிரியாணி
தேவையாûவை:
பாசுமதி அரிசி - அரை கிலோ
நெல்லிக்காய் - 50 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் -2
மல்லி இலை - 1 கைப்பிடி
புதினா - கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
இஞ்சி,பூண்டு விழுது- தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
செய்முறை:

நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய் பாதி கொத்துமல்லி, புதினா சேர்த்து வதக்கி , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். தேவைக்கேற்ப நீர் ஊற்றிகிளறிவிட்டு ஒரு கொதி வந்ததும் பாசுமதி அரிசியை போடவும்.
முக்கால் பாகம் வெந்து வரும் போது மீதி பாதி கொத்துமல்லி, புதினா, சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு தீயின் அனலை மிதமாக வைத்து இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து கிளறி விடவும். சுவையான நெல்லிக்காய் பிரியாணி ரெடி.
நெல்லிக்காய் துவையல்

தேவையானவை :
பெரிய நெல்லிக்காய் - 4
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 4
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், இஞ்சி, நெல்லிக்காய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, மற்றும் நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காய் வதங்கியதும், அதனுடன் நறுக்கிய வெங்காயம்,
மிளகாய், தேங்காய்த்துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி ஆற விடவும். வதக்கி ஆற வைத்த கலவை நன்கு ஆறியதும், மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான
நெல்லிக்காய் துவையல் ரெடி.
நெல்லிக்காய் புதினா ஜூஸ்

தேவையானவை :
பெரிய நெல்லிக்காய் - 4
புதினா - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தண்ணீர் - 200 மில்லி
வெல்லப் பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை மிக்ஸி ஜாரில் இட்டு அதனுடன், புதினா மற்றும் தோல் சீவிய இஞ்சி, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் வெல்லத்தூள் சேர்த்துப் பருகவும். ருசிக்கு சிறிது உப்பு சேர்க்கலாம். இது ஒரு நல்ல பசி தூண்டி, உடல் சூட்டைத் தணித்து, நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லி மற்றும் புதினாவின் வைட்டமின் ஏ சேரும்போது உடலின் செல்களைப் புதுப்பிக்கும். வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரம் இருமுறை இதைப் பருகலாம்.
நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை:
நெல்லிக்காய் - 6
வெங்காயம் - 1
தயிர் - 100 மி.கி
உப்பு - சிறிது
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
வெங்காயம்
பொடியாக நறுக்கி வைக்கவும். நெல்லிக்காயை துருவி வைக்கவும். நெல்லிக்காய் துருவல்,பொடியாக நறுக்கிய வெங்காயம் உப்பு கலக்கவும். பிறகு இந்த கலவையில் தயிர் சேர்க்கவும். தேவைப்பட்டால் கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்க்கலாம். பிரியாணி, சப்பாத்தி, நூடுல்ஸ்க்கு ஏற்ற சைடிஷ் இது. தைராய்டு நோய், எதிர்ப்பு சக்தி குறைபாட்டுக்கு இது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

