சோஷியல் மீடியா எனும் சமூக வலைதளங்கள் தற்போது மக்களிடைய பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் அவரவர் தங்களது எண்ணத்தை வெளியிடவும், தங்களது கற்பனையை பகிர்ந்து கொள்ளவும் தளம் அமைத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில், டிக்டாக், டப்ஸ்மாஷ், இன்ஸ்டா போன்றவற்றின் மூலம் வெளி உலகத்துக்கு அறிமுகமாகி பிரபலங்களும் ஏராளம்.
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களிடையே டிக்டாக் மோகம் குறையவில்லை. தங்களது கற்பனைக்கு லைக், கமெண்ட், பாராட்டுகள் கிடைப்பதால் இதனை பலரும் விரும்புகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பதினாறு வயதான சார்லி டி அமெலியோ ஒன்றரை ஆண்டில் 100 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று டிக்டாக் உலகில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆம், அமெலியோ நடன விடியோக்களால் புகழடைந்தவர். அவரது நடன விடியோக்களைப் பார்ப்பதற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த சாதனையை அமெலியோ புரிந்துள்ளதே அவரது தனித்துவம்.
2019-ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிக்டாக்கில் விடியோக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார் அமெலியோ. அது இன்று 100 மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்துள்ளது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்கிறார்கள் சமூக வலைதள பிரியர்கள்.
பிரபல ஹாலிவுட் நடிகர்களான வில் ஸ்மித்தை விட இரு மடங்கு அதிகமாகவும், ராக்-கை விட 3 மடங்கு அதிகமாகவும், செலினா கோமûஸ விட 4 மடங்கு அதிகமாகவும் ஃபாலோயர்களை டிக்டாக்கில் தனக்கென உருவாக்கி அமெரிக்கா முழுவதும் உள்ள இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார் அமெலியோ.
தற்போது, பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து மேடைகளில் தோன்றி வரும் அமெலியோ விரைவில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், அவரது வாழ்க்கை பயணம் குறித்த "உள்ள்ங்ய்ற்ண்ஹப்ப்ஹ் இட்ஹழ்ப்ண்: பட்ங் மப்ற்ண்ம்ஹற்ங் என்ண்க்ங் ற்ர் ஓங்ங்ல்ண்ய்ஞ் ஐற் தங்ஹப்' என்ற புத்தகத்தையும் விரைவில் வெளியிட உள்ளார்.
டிக்டாக் மட்டுமல்லாமல் யூடியூப் போன்ற மற்ற சமூக ஊடகங்களிலும் அமெலியோ செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


