சின்னத்திரை மின்னல்கள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரின் நாயகி ராசாத்தியாக எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் ராஜகுமாரியாக இடம் பிடித்திருப்பவர் அஸ்வினி.


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரின் நாயகி ராசாத்தியாக எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் ராஜகுமாரியாக இடம் பிடித்திருப்பவர் அஸ்வினி. இவரது பூர்விகம் பெங்களூரு. தொடரின் படப்பிடிப்புக்காக, சென்னைக்கும் - பெங்களுருக்கும் மாறி மாறி பயணம் செய்து கொண்டிருக்கும் அஸ்வினி தனது சின்னத்திரை எண்டரி குறித்து கூறுவது, ""இப்போது நினைத்தாலும் கனவு மாதிரி இருக்கிறது. ஒரு ரியாலிட்டி ஷோவில் நானும் எனது நாத்தனாரும் கலந்து கொண்டோம். அதன் மூலம்தான் "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கதையை கேட்டதும், ரொம்ப பிடித்திருந்தது. என் கணவரும், "உனக்கு பிடித்திருந்தால் செய்' என்றார். சரி நடித்துதான் பார்ப்போமே என களத்தில் இறங்கினேன். ஆரம்பத்தில் காமரா, மேக்கப் எல்லாம் எனக்கே வித்தியாசமாக இருந்தது. இப்போ ரொம்ப என்ஜாய் பண்றேன். தமிழ் இப்போதான் கற்று வருகிறேன். ஆனால், யாராவது பேசினால் புரிந்து கொள்வேன். நிஜத்தில் நான் ராசாத்தி மாதிரி இல்லை. ரொம்ப போல்டான, ஜாலியான பொண்ணு. அழுவது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது.
குண்டாக இருப்பதைப் பற்றி நான் எப்பவுமே பீல் பண்ணினது கிடையாது. என்னைப் பார்த்தாலே டயட் இருப்பது எல்லாம் கஷ்டம்னு உங்களுக்கே தெரியும். ஆனா, தினமும் தவறாம உடற் பயிற்சி செய்வேன். நோய் இல்லாம ஆரோக்கியமாக இருக்கிறோமா அதுதான் முக்கியம். தற்போது சீரியல் 700 -ஆவது எபிசோடை கடந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தளவுக்கு ரீச்சாகும் என்று அப்போது நினைக்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்குதான் என் நன்றியை சொல்லணும்'' என்றார்.

தற்கொலை, கண நேரத்தில் எடுக்கும் முடிவு என்றாலும் அந்த முடிவு அவ்வளவு எளிதில் எடுத்துவிட கூடியதல்ல என்பதற்கு வி.ஜே சித்ராவின் தற்கொலை ஒரு எடுத்துக்காட்டு.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ் புக் என அனைத்து சமூக வலைத் தளங்களிலும் ஊடுருவி ரசிகர்களை மனவேதனையில் ஆழ்த்திவிட்டது சித்ராவின் இழப்பு.
எம்.எஸ்சி சைக்காலஜி படித்திருக்கும் சித்ரா, சினிமா மீது இருந்த ஆர்வத்தால் படிக்கும் போதே மாடலிங், விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்னர், படிப்படியாக தனது உழைப்பால், திறமையால் வளர்ந்து சின்னத்திரை நடிகையானார். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். அந்த தொடரில் கதிர் மற்றும் சித்ராவின் ஜோடியை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் உள்ளது. இதன் காரணமாகவே, இவரது இன்ஸ்டா பக்கத்தில் 1.5 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர். அவர், இறப்பதற்கு முன்பாகக் கூட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது தான் ரசிகர்களின் தீராத மனவேதனையாக மாறிஉள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல - சைக்காலஜி படித்த பெண் இப்படி செய்யலாமா- யோசிக்க வேண்டாமா என்றும், தினமும் இறப்பதற்கு ஒரு முறை இறந்துவிடலாமே என்ற நொடிப்பொழுதில் எடுக்கும் அற்பமான எண்ணம் தான் சித்ராவின் இந்த தற்கொலை. மனதின் வடுக்களையும் காயங்களையும் ஒப்பனையால் மறைக்காமல் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிடுங்கள். தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என பல ரசிகர்கள் தங்களது மனக் குமுறலை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...