வெங்காயப் பூவின் மகத்துவம்!
வெங்காயத்தின் பூ - நச்சுக்கிருமி அழிப்பில் அற்புதமான மருந்தாகும். நோய்களை அழிக்கும் வைட்டமின்-சி வெங்காயப் பூவில் மிகுதியாக உள்ளது என்பது கண்டறியப் பட்டிருக்கிறது.


வெங்காயத்தின் பூ - நச்சுக்கிருமி அழிப்பில் அற்புதமான மருந்தாகும். நோய்களை அழிக்கும் வைட்டமின்-சி வெங்காயப் பூவில் மிகுதியாக உள்ளது என்பது கண்டறியப் பட்டிருக்கிறது.
வெங்காயப் பூவை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தம் சுத்தமாகிறது. ஜீரண மண்டலம் வலிமையுடன் செயல்படுகிறது. நாடித் துடிப்பு சீராக இருக்கும். உடல் சூடு தணியும்.
வெங்காயத்தையும், வெங்காயப் பூவையும் சம அளவாக சேர்த்து வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.
பல் வலிக்கு வெங்காயத்தையும் வெங்காயப் பூவையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து அன்றாடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் பல்வலி, ஈறுவலி ஆகியவை குணமாகும்.
பெண்களுக்கு சரியாக மாதவிலக்கு ஆகாததோடு, மாத விலக்கு காலத்தில் வயிற்றுவலி போன்ற குறைபாடுகள் இருந்தால் வெங்காயப் பூவைச் சேகரித்து காய வைத்து இடித்துத் தூளாக்கி, அந்தத் தூளை ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
வெங்காயப் பூவை தயிரில் அரிந்து போட்டுச் சாப்பிட மூல நோய் மறையும். வெங்காயப் பூவை நெய்விட்டு வதக்கி தினமும் சாப்பிட்டால் நல்ல உறக்கம் வரும்.
"மலர்களின் மருத்துவம்' என்ற நூலிலிருந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...