தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கை வைத்தியம்!

காலை உணளக்கு அரைமணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

News image
Updated On :20 மே 2020, 2:55 pm

ஹெச். சீதாலஷ்மி

காலை உணளக்கு அரைமணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

கடுக்காய்ப் பொடியைப் பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம், ரத்தம் கசிதல் ஆகியவை குணமாகும்.

வேப்பிலையை காயவைத்து பொடியாக்கி அதில் கடலைமாள, மஞ்சள் பொடியைக் கலந்து பாலில் குழப்பி பருக்கள் மீது தடவி வர பருக்கள் உதிர்ந்துவிடும்.

விளக்கெண்ணெய்யில் மஞ்சள் தூளைக் குழைத்து காலில் உள்ள வெடிப்புகளில் பூசி வந்தால் விரைவில் வெடிப்புகள் மறைந்துவிடும்.

மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் உணவில் அதிக அளவில் வெந்தயக் கீரையைச் சேர்த்து வருவது நல்லது.

கற்பூரவல்லி இலையில் இரண்டு மிளகையும், ஒரு கல்லுப்பையும் வைத்து மடித்து மென்றுதின்றால் தொண்டைக் கரகரப்பு சரியாகிவிடும்.

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.

கடுக்காய்த் தூளை வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் மலசிக்கல் சரியாகும்.

வயிற்றுவலி, வாய்ப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்தால் சரியாகிவிடும்.

இரவில் நன்கு தூக்கம் வரவில்லையா? சீரகப் பொடியை வாழைப்பழத்துடன் சேர்த்து, தூங்கப் போகும் முன் சாப்பிட்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.