47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அழகு, அழகோ அழகு தீபிகா படுகோனே!

நம்பிக்கை, அடையாளம், கவர்ச்சிகரமான, மரியாதை மற்றும் பிரபலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு  ஆண்டுதோறும் கள ஆய்வை நடத்தி வரும் டிஐஏஆர்ஏ (TIARA)  என்ற ஆராய்ச்சி  நிறுவனம்,  சமீபத்தில்  "பிரபலங்கள்

News image
Updated On :4 நவம்பர் 2020, 12:30 am

DIN

நம்பிக்கை, அடையாளம், கவர்ச்சிகரமான, மரியாதை மற்றும் பிரபலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு  ஆண்டுதோறும் கள ஆய்வை நடத்தி வரும் டிஐஏஆர்ஏ (TIARA)  என்ற ஆராய்ச்சி  நிறுவனம்,  சமீபத்தில்  "பிரபலங்கள் மனித பிராண்டுகளாக' என்பது குறித்து ஓர் ஆய்வை நடத்தி உள்ளது.

பிரபலங்கள் பெரும்பாலும் பிராண்டுகளாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் வேலை, தனிப்பட்ட  மற்றும் தொழில் முறை நடத்தை மற்றும் ஊடகங்களில் உள்ள பிம்பம் அவர்களின் "பிராண்ட் மதிப்புக்கு' குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதே இந்த ஆய்வுக்குக் காரணம்.  அந்த வகையில்,  23 நகரங்களில் 60,000 நபர்களிடம் விளம்பரங்களில் வரும் 180 பிரபலங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக விளம்பரங்களில் பிரபலங்கள் வரும்போது மக்கள் அதை காண அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனை அடிப்படையாக கொண்டே கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின்படி இந்தியாவின் மிக அழகானவர்: தீபிகா படுகோனே
இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமானவர்: அலியா பட்
இந்தியாவின் மிகவும் மயக்கும்தன்மை கொண்டவர்: ராதிகா ஆப்தே
இந்தியாவின் மிகவும் கவர்ச்சியானவர்: பிரியங்கா சோப்ரா
இந்தியாவின் மிகவும் நம்பகமானவர்: சாய்னா நேவால் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.