சமையல் டிப்ஸ்...
வெங்காயம், பூண்டை தண்ணீரில் தனித்தனியே போட்டு பிறகு உரித்தால் சுலபமாக உரிக்க வரும். கண் எரிச்சல் வராது.


வெங்காயம், பூண்டை தண்ணீரில் தனித்தனியே போட்டு பிறகு உரித்தால் சுலபமாக உரிக்க வரும். கண் எரிச்சல் வராது.
பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமலிருக்கும்.
கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.
புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால், அரை மூடி எலுமிச்சம் பழச்சாறுவிட்டு, இறக்கினால் பொலபொலவென்று இருக்கும்.
பக்கோடா மொறு மொறுப்பாக இருக்க மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.
ரவா லட்டு செய்யும்போது கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டைப்பிடிக்க, உருண்டை சுலபமாக வரும். வாசனையாகவும் இருக்கும்.
ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க அதனை உடைக்கும் முன்பு தண்ணீரில் நனைத்து பின்னர் உடைத்தால் எளிதில் சரிபாதியாக உடையும்.
எலுமிச்சை பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பழங்களை எப்போதும் புதிதாகவே காணப்படும் நிறைய சாறும் கிடைக்கும்.
ஊறுகாயை எப்போதும் கண்ணாடி பாட்டிகளில் போட்டு வைக்கவும். அவ்வாறு செய்தால் ஊறுகாய் கெடாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைத்து தோலை தூக்கி எறியாமல் முகம் பார்க்கும் கண்ணாடியைத் துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
- வசந்தா மாரிமுத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...