பாப்கார்ன் பிரியரா உஷார்!

தியேட்டர், மால்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாரும் விரும்பி வாங்குவது பாப்கார்ன்தான்.
பாப்கார்ன் பிரியரா உஷார்!


தியேட்டர், மால்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாரும் விரும்பி வாங்குவது பாப்கார்ன்தான். இதற்கு அதன் மணமும் சுவையும் ஒரு காரணம் என்றால், சோளப்பொரி  உடம்புக்கு நல்லதுதானே என்கிற நினைப்பும் இன்னொரு காரணம்.
சோளம் உடலுக்கு நல்லதுதான். நார்ச்சத்து நிறைந்ததுதான். கலோரி குறைவான, ஆரோக்கியமான தீனிதான். 
சந்தேகமே இல்லை. ஒரு கப் பாப்கார்னில் வெறும் முப்பதே கலோரிகள்தான் இருக்கிறது.
வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரிப்பதில்தான் கிடைக்கும்.
100 கிராம் அளவுள்ள இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்டை பொரித்தால் கிடைப்பது, 510 கலோரிகள்... 55 கிராம் கார்போஹைட்ரேட், 58 கிராம் கொழுப்பு அமிலங்கள், 10 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் புரதச்சத்து.
சோளத்தைப் பொருத்தவரை கடலை வறுக்கிற மாதிரி அப்படியே பொரித்தால், மணமோ, சுவையோ இருப்பதில்லை.
அதனால்தான் எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துப் பொரித்து விற்பனை செய்கிற கடை  அயிட்டங்களுக்கும், இன்ஸ்டன்ட் பாக்கெட்களுக்கும் அத்தனை மவுசு.
அதுபோன்று  மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்கள் இன்னும் ஆபத்தானவை என பீதியைக் கிளப்புகின்றன லேட்டஸ்ட் ஆராய்ச்சிகள்.
தட்டையாகக் காட்சியளிக்கிற அந்த பாக்கெட்டை அப்படியே மைக்ரோவேவில் வைத்தால், சில நொடிகளில் உள்ளே உள்ள சோளப்பொரிகள் பொரிந்து, பாக்கெட் பூரித்து உப்பிப் பெரிதாகும். பாப்கார்ன் பொரிகிறபோது அதிலிருந்து கிளம்புகிற வெண்ணெய் வாசம், யாரையும் மயங்க வைக்கும்.
அந்த மயக்கத்துக்குக் காரணமானது "டைஅசிட்டைல்' ரசாயனம்தான். பாப்கார்ன் பாக்கெட்களில் ஒளிந்திருக்கிற எமன் என்பது பலருக்கும் தெரியாது.
பாப்கார்ன் பாக்கெட்டில் மட்டுமில்லாமல், குளிர்பானங்கள் உள்ளிட்ட நிறைய உணவுப் பொருட்களில் இந்த டைஅசிட்டைல் சேர்க்கப்படுகிறது.
இது மஞ்சள் நிறத்தில் பவுடராகவோ, திரவ வடிவத்திலோ இருக்கும். மார்ஜரின் மற்றும் எண்ணெய் உணவுத் தயாரிப்பாளர்கள், இதை உபயோகப்படுத்தி, சம்பந்தப்பட்ட  உணவுக்கு செயற்கையான வெண்ணெய் மணத்தையும் சுவையையும் ஏற்படுத்துகிறார்கள்.
பொதுவாகவே,  மேலே சொன்ன செயற்கை வெண்ணெய்  பொருளைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளிலும், மைக்ரோவேவ் பாப்கார்ன் தயாரிப்புத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது.
எனவே, மைக்ரோவேவ் பாப்கார்னை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 
சுவையும் மணமும் குறைவாக இருந்தாலும் வீட்டிலேயே சாதாரண முறையில் தயாரிக்கக்கூடிய பாப்கார்னே பாதுகாப்பானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com