பணக்கார பெண்களில் முதலிடம்!

உலகின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்மணிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
பணக்கார பெண்களில் முதலிடம்!

உலகின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்மணிகளில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், அமேசான் சி.இ.ஓ ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி ஆவார். 50 வயதாகும் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 6,800 கோடி டாலர் ஆகும்.

மெக்கென்சி தனது 25 ஆண்டுகால மண வாழ்க்கையில் இருந்து கணவர் ஜெப் பெசோசினிடம் விவாகரத்து பெற்ற போது, அவரிடமிருந்த அமேசானின் பங்குகளில் கால்வாசியை பெற்றார். நிறுவனத்தின் 4 சதவித பங்குகளான அவற்றின் அப்போதைய மதிப்பு 3,500 கோடி டாலராகும். அதன் மதிப்பு இரட்டிப்பானதால் தற்போது இவரது சொத்து மதிப்பும் இரட்டிப்பாகியுள்ளது.

இதனால், சென்ற ஆண்டு முதலிடத்திலிருந்த "லோரியால்' அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரான பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

வாரன் பப்பெட், மெலிண்டா கேட்ஸ் தொடங்கியுள்ள அமைப்பில் தற்போது இணைந்துள்ளார் மெக்கென்சி. இந்த அமைப்பு பணக்காரர்களை தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்க ஊக்குவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com