தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நான்-ஸ்டிக் பான் பராமரிப்பு!

நான் ஸ்டிக் பாத்திரங்களை இப்போது பலரும் விரும்பி வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவற்றை மிக ஜாக்கிரதையாக பராமரித்து வந்தால்தான் நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியும்.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 1:03 pm

ஹெச். சீதாலஷ்மி

நான் ஸ்டிக் பாத்திரங்களை இப்போது பலரும் விரும்பி வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவற்றை மிக ஜாக்கிரதையாக பராமரித்து வந்தால்தான் நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியும்.

மிதமான தீயில்தான் நான் - ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

சமைக்கும் பொருள்கள் ஏதுமின்றி நான்-ஸ்டிக் பாத்திரம் தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் தீயிலிருந்தால் பாத்திரத்தில் பூசப்பட்ட கோட்டிங் பாழாகிவிடும்.

நான் - ஸ்டிக் பாத்திரங்களை மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைத்தால் போதுமானது.

நான் - ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது ஸ்டீல், இரும்பு கரண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது. மர கரண்டிகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

நான் - ஸ்டிக் பாத்திரங்களை அதற்குரியதான ஆணியில் மாட்டிப் பாதுகாக்க வேண்டும்.

இந்த செய்முறைகளை கடைப்பிடித்து வந்தால் நான்- ஸ்டிக் பாத்திரங்கள் நீண்டநாள் உழைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.