இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வனிதா குப்தாவை அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்க, பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
வனிதா குப்தா, சமூக உரிமைகள் தொடர்பான விஷயத்தில், அமெரிக்காவில் தலைச்சிறந்த வழக்கறிஞராக இருந்து வருகிறார். ஒபாமா அதிபராக இருந்தபோது, உதவி அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியும் உள்ளார்.
தற்போது, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின், நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவியான, இணை அட்டர்னி ஜெனரலாக, வனிதா குப்தா பதவி ஏற்கிறார்.
அவரது நியமனத்தை உறுதி செய்வதற்காக, பார்லிமென்டின் செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம், 100 உறுப்பினர்கள் உள்ள செனட் சபையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கு தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர்.
குடியரசு கட்சியின் லிசா முர்கோவ்ஸி ஆதரித்து ஓட்டளித்ததால், 51 - 49 என்ற ஓட்டு விகிதத்தில், வனிதா குப்தா நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அவரது இந்த நியமனத்துக்கு, அமெரிக்க வாழ் இந்தியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கறுப்பினத்தவருக்கு எதிரான இனவெறி தொடர்பான வழக்குகளில் வென்றுள்ள வனிதா குப்தாவுக்கு, கறுப்பின மக்களும் ஆதரவும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


