கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை வடிவமைத்த விஞ்ஞானியான பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட்டின் உருவத்தில் பார்பி பொம்மையை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. உலகின் புகழ்பெற்ற பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனமான மெட்டல் இன்க்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் 59 வயதான டேம் சாரா கில்பர்ட், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கரோனா நோய் தொற்று முதன்முதலில் சீனாவில் பரவுவதாகக் கூறப்பட்டபோதே அவர், தனது குழுவினருடன் இணைந்து தடுப்பூசி உருவாக்கும் பணியைத் தொடங்கி, அஸ்ட்ராஜெனேகா என்ற தடுப்பூசியை உருவாக்கினார்.
இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி தற்போது 170 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசியாகவும் திகழ்கிறது.
இந்நிலையில், டேம் சாராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனம் அவரது உருவ பார்பி பொம்மையை உருவாக்கியுள்ளது.
மேலும், டேம் சாராவுடன் சேர்த்து, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் ஸ்டெம் துறைகள் மூலம் கரோனா வைரûஸ எதிர்த்து போராடிய பெண்களான பிரேசிலிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜாக்குலின் கோஸ் டி ஜீசஸ், ஆஸ்திரேலிய மருத்துவர் டாக்டர் கிர்பி ஒயிட், லாஸ் வேகாஸின் முன்னணி ஊழியர் டாக்டர் ஆட்ரி சூ குரூஸ், கனடாவை சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் சிகா ஸ்டேசி ஓரியுவா மற்றும் அமெரிக்க மருத்துவமனையின் அவசரப் பிரிவு செவிலியர் ஆமி ஓ சல்லிவன் என ஆறு பெண்களின் உருவத்தையும் பார்பி பொம்மைகளாக உருவாக்கி கெளரவப்படுத்தியுள்ளது.
இது குறித்து கில்பர்ட் கூறியதாவது:
""என்னைப் போன்ற வைரஸ் ஆராய்ச்சியாளர்களின் வாழ்க்கையைப் பற்றி என் உருவ பொம்மை மூலம் குழந்தைகள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தத் தலைமுறைப் பெண்களை ஸ்டெம் கேரியரில் ஊக்குவிப்பதில் நான் ஆர்வமாக உள்ளேன். எனது உருவ பார்பியைப் பார்க்கும் குழந்தைகள், தங்களைச் சுற்றியுள்ள உலகில் அறிவியல் எவ்வளவு முக்கியத்துவமான தொழில் என்பதை உணர முடியும் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


