பிரசவத்துக்கு சைக்கிளில் பயணம்
பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியில் அ"மைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் ஓர் ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.


பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் ஓர் ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஜுலி அன்னெஜென்டர். வயது 38. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, சமீபத்தில், பிரசவலி எடுத்தது. உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா?
தன் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சைக்கிளில் ஏறி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். நிறைமாத கர்ப்பிணி அதுவும் நாட்டின் அமைச்சர் பதவியில் இருப்பவர், சைக்கிளில் சென்றதைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
சைக்கிளில் இருந்து இறங்கி அவர் வேகமாக மருத்துவமனைக்குள் சென்று தனக்கு பிரசவவலி எடுப்பதாக கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரண்டு நாள்களுக்குப் பின் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...