/

ஒரு நா‌ள் முத‌ல்​வ‌ர்!

கடந்த ஜனவரி 24 -ஆம் தேதியன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2021, 12:30 am

கடந்த ஜனவரி 24 -ஆம் தேதியன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.  அன்று நாடு முழுவதும்  அனைத்து மாநிலங்களிலும் பெண்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகிலுள்ள தௌலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த  19 வயதான சிருஷ்டி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி உத்தரகண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக செயல்பட்டார். 

அந்த ஒரு நாளில் அவர் அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களின் பணிகளையும் மேற்பார்வையிட்டார்.  அப்போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருந்தார். 

சிருஷ்டி உத்தரகண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த குழந்தைகள் சட்ட சபையை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.

கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லத்தரசியாகவும் உள்ளனர். 

இதுகுறித்து சிருஷ்டி கூறுகையில்,  இதை என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை பெற்றுள்ளேன்.  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில், இளைஞர்கள் மக்களின் நலன் சார்ந்து வேலை பார்க்கும் போது, நிர்வாகத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த வரை சிறப்பாகச் செயல்படுவேன்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.