சுருள்பட்டையின் பயன்கள்!

பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட வாசணை பட்டை மிகச்சிறந்த கிருமிநாசினி. இதிலுள்ள பினால் என்ற வேதிப்பொருள், வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
சுருள்பட்டையின் பயன்கள்!

பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட வாசணை பட்டை மிகச்சிறந்த கிருமிநாசினி. இதிலுள்ள பினால் என்ற வேதிப்பொருள், வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.

மன அழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்துகிறது.

பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை சீராக வைக்க உதவுகிறது.

நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

பருக்களின் மீது பட்டையை அரைத்துப் பூசி வந்தால் விரைவில் பரு போய் விடும்.

பட்டையை நுகர்ந்து பார்ப்பதால் மூளையின் ஆராய்ந்து அறியும் அறிவும், நினைவாற்றலும் அதிகப்படுகிறது.

தினமும் அரைதேக்கரண்டி பட்டைப்பொடியை சாப்பிட்டு வர அது கொழுப்பைக் கட்டுப்படுத்தும்.

பட்டை பூஞ்சைகாளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.

தலைவலிக்கும் பட்டையை அரைத்து தடவலாம்.

சிறுநீர் உபாதை, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் பாக்டீரியா தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

தினமும் காலை அரைத்தேக்கரண்டி பட்டைப் பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வர, அது நாள்பட்ட மூட்டுவலியை குணப்படுத்தும். மாதவிடாய் பிரச்னைகளை கட்டுப்படுத்தி, மாதவிடாயை சீராக்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com