சாதனை படைத்த பெண் விமானிகள்..!

விமானம் ஓட்டுவதில் புதிய சாதனையை படைத்துள்ளனர் இந்தியப் பெண் விமானிகள்.  சான்பிரான்சிஸ்கோ -  பெங்களூரு நகர்களுக்கு இடையிலான விமானப் பாதை உலகின் மிகவும் தூரமான விமானப் பாதைகளில் ஒன்று.
சாதனை படைத்த பெண் விமானிகள்..!
Published on
Updated on
2 min read


விமானம் ஓட்டுவதில் புதிய சாதனையை படைத்துள்ளனர் இந்தியப் பெண் விமானிகள். சான்பிரான்சிஸ்கோ - பெங்களூரு நகர்களுக்கு இடையிலான விமானப் பாதை உலகின் மிகவும் தூரமான விமானப் பாதைகளில் ஒன்று. இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் உள்ள வான்வழி தூரம் சுமார் 16 ஆயிரம் கி.மீ.

சான்பிரான்சிஸ்கோ - பெங்களூரு விமானப் பாதையை டன் கணக்கில் பனி உறைந்து கிடைக்கும் வட துருவத்தின் மேலாகக் கடக்க வேண்டுமாம். இந்தத் தொலைவை இடையில் எந்த நிறுத்தமும் இல்லாமல் தொடர்ந்து விமானம் ஓட்டுவது பெரிய சவால்.

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து விமானம் புறப்பட்டால் அடுத்த நிறுத்தம் தென் திசையில் இருக்கும் பெங்களூருதான். வடக்கு - தெற்கு எதிர் திசையில் அமைந்து இருக்கும் நகரங்களை இணைக்கும் இத்தகைய தூரம் கூடிய வான்வழித்தடங்களில் விமானத்தைச் செலுத்த அனுபவம் உள்ள ஆண் விமானிகளை மட்டுமே அனுமதித்து வந்தார்கள்.

வட துருவத்தின் மேல் பறக்கும் பொழுது காற்று மண்டலத்தில் ஏற்படும் வேறுபாடுகள் விமானம் பிறப்பதில் பல சிக்கல்களை உருவாக்கும். அப்படிப்பட்ட கடினமான விமான வழி தடத்தில் 238 பயணிகள் அமரக் கூடிய "ஏர் இந்தியா' போயிங் 777 விமானத்தை வடதுருவத்தின் மேலாக இயக்கி முதன் முதலாக இந்திய பெண் விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.

""சான்பிரான்சிஸ்கோவிலிருந்து உலகின் வடக்குப் பகுதியில் பயணிக்கும் விமானம் ரஷ்யாவின் மேல் பறக்கும் போது தெற்கு திசை நோக்கிச் சரிந்து பறக்க ஆரம்பிக்கும். விமானம் மேலும் தெற்கு நோக்கித் திரும்பி பெங்களூரு வந்தடையும். இந்தியா கேப்டன் úஸாயா அகர்வால் தலைமையிலான இந்தியப் பெண் விமானிகள் குழு, சான்பிரான்சிஸ்கோவிலிருந்து ஜனவரி 9 இரவு எட்டரை மணிக்கு புறப்பட்டு, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை 11 ஜனவரி அதிகாலை மூன்றரை மணிக்கு வந்தடைந்தனர். இது குறித்து úஸாயா கூறுகையில்,

அரிய வாய்ப்பாக அமைந்த இந்த சாதனை இயக்கத்தில் என்னுடன் விமானத்தை ஒட்ட போதுமான அனுபவம் உள்ள பெண் விமானிகளான தன்மை பாபாக்கரி, அகங்ஷா úஸாநாவானே, ஷிவானி மன்ஹாஸ் இணைந்தனர்.

நான்கு பெண் விமானிகள் அடங்கிய குழு முதன் முதலாக வடதுருவம் வழியாக விமானத்தில் பறந்து சாதனை படைத்திருக்கிறோம். இந்த வான்வழிப் பாதையில் வந்ததினால் சுமார் பத்து டன் எரிபொருள் சேமிக்க முடிந்திருக்கிறது. சான்பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூர் வந்து சேர 17 மணி நேரம் பறந்தோம்'' என்கிறார் úஸாயா அகவர்வால்.

úஸாயா அகர்வால் 2013-இல் போயிங் 777 விமானத்தை மிகக் குறைந்த வயதில் இயக்கிய உலகின் முதல் பெண் விமானியாக சாதனை படைத்தவர்.

சான்பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு இடையில் நிறுத்தம் இல்லாத விமான பயண சேவை தேவை என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அது இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. இந்த பயண சேவை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், சனி கிழமைகளிலும் , பெங்களூரு - சான்பிரான்சிஸ்கோ நான்- ஸ்டாப் விமான சேவைகள் திங்கள், வியாழன் தினங்களிலும் அறிமுகமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com