கீரின் சப்பாத்தி

அரைக்கீரையை  சுத்தம் செய்து  பொடியாக  நறுக்கிக் கொள்ளவும்.
கீரின் சப்பாத்தி


தேவையானவை:

கோதுமை மாவு - கால் கிலோ
அரைக்கீரை - 1 கைப்பிடியளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 1
மிளகு - கால் தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன், சீரகம், இஞ்சி, பூண்டு, மிளகு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். பின்னர், அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து உப்பிட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 மணி நேரம் வைக்கவும். பின்னர், சப்பாத்திகளாக தேய்த்து சுட்டு எடுக்கவும். கீரின் சப்பாத்தி தயார். இத்துடன் குருமா அல்லது டால் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com