சாதித்த மகளிர் பற்றிய தகவல்கள்: கதம்பம்

உள்ளூரில்  மருத்துவக்கல்வி பயில  எதிர்ப்புத் தோன்றியதால்  அவர் இங்கிலாந்து  சென்று டாக்டர் பட்டம்  பெற்றார்.
மேரி பூனம்  லக்ஸோஸ்
மேரி பூனம்  லக்ஸோஸ்
Published on
Updated on
3 min read

முதல் சர்ஜன் - ஜெனரல் ஆஃப் இந்தியா!

மேரி பூனம்  லக்ஸோஸ்  1881-இல்  கேரளத்தில்  ஒரு கிருஸ்துவக் குடும்பத்தில்  பிறந்தவர். 1909 -இல்  சென்னைப்  பல்கலைக்கழகத்தின்  முதல் பெண்  பட்டதாரி என்ற  பெயர் பெற்றார்.  உள்ளூரில்  மருத்துவக்கல்வி பயில  எதிர்ப்புத் தோன்றியதால்  அவர் இங்கிலாந்து  சென்று டாக்டர் பட்டம்  பெற்றார்.

1924 -ஆம் ஆண்டு திருவாங்கூர்  ராஜ்ஜியத்தின்  நல்வாழ்வுத்துறை  இயக்குநராகப் பதவி  ஏற்றார்.  1938 -இல்  இந்திய  அரசில்  "சர்ஜன்  - ஜெனரல் ஆஃப் இந்தியா' என்ற  பதவியையும் திறம்பட  வகித்து,  தேசிய  மட்டத்தில்  அவ்வுயரிய  பதவியை  எட்டிய முதல்  பெண் டாக்டர்  என்ற  பெருமையையும்  தட்டிச் சென்றார் மேரி  பூனம்.

நாட்டின்  முதல் எக்ஸ்ரே  நிலையமும்  முதல்  ரேடியம்  வார்டும்  அவர் காலத்திய  சாதனைகளாகும்.
(கிளமெண்ட்  ஈசுவர்  எழுதிய  "முதன்மைப் பெண்டிர்' நூலிலிருந்து)


திருநங்கை சமூகத்துக்குக் கிடைத்த கௌரவம்! 

2019-  ஆம் ஆண்டில்  "பத்மஸ்ரீ விருது' பெற்ற  முதல்  திருநங்கை  நர்த்தகி நட்ராஜ்,  மேலும் ஒரு கௌரவத்தைப்  பெற்றுள்ளார்.  முதல்வர்  ஸ்டாலின்  அமைத்துள்ள தமிழ்நாடு  மாநில  வளர்ச்சிக்  கொள்கை  ஆலோசனைக் குழுவில்  இடம் பெற்றுள்ளார்.  முதன்முதலாக  திருநங்கை  ஒருவருக்கு  வாய்ப்பளித்திருப்பது,  திருநங்கை சமூகத்திற்கு  அளிக்கப்பட்ட  கௌரவமாக  கருதப்படுகிறது.


சிறுவயது முதலே  பரதம்  கற்றுக் கொள்வதில்  பெரிதும் ஆர்வமாக  இருந்த நர்த்தகி  நட்ராஜ்.  தஞ்சாவூர்  பாணி பரத நாட்டியம் பயிற்சியளிப்பதில் பிரபலமான  நடன ஆசிரியர்  கே.பி.கிட்டப்பா  பிள்ளையிடம்,  தனக்குப்   பயிற்சியளிக்கும்படி  கேட்டபோது  முதலில்  அவர் மறுத்துவிட்டாராம்.  தான் ஒரு திருநங்கை  என்பதால்  மறுத்துவிட்டாரோ என்று நர்த்தகி  நட்ராஜ்  சந்தேகப்பட்டார்.  ஆனால் இவருக்கு  உண்மையிலேயே  நடனம்  கற்றுக் கொள்ள ஆர்வம்  இருக்கிறதா  என்பதை அறிந்து கொள்ளவே  மறுத்த கிட்டப்பா  பிள்ளை, பின்னர்  நடனப் பயிற்சியளிக்க  ஒப்புக் கொண்டாராம்.  14 ஆண்டுகள்  முறையாக  பயிற்சிப்  பெற்ற நர்த்தகி  நட்ராஜ்,  முறைப்படி  அரங்கேற்றம்  நடத்தி  பலமுறை  மேடை நிகழ்ச்சிகள்  நடத்தி  பிரபலமானார்.
திருநங்கை  சமூகத்துக்கு ஒரு  எடுத்துக்காட்டாக  விளங்கி வரும் நர்த்தகி  நட்ராஜின்  வாழ்க்கை,  தமிழ்நாடு  பள்ளிகளில்  பதினோராம்  வகுப்பு  தமிழ் பாடப் புத்தகத்தில்  இடம் பெற்றிருப்பது இன்னமொரு சிறப்பாகும்.  பரத நாட்டியம் கற்றுக்  கொள்வதில்  திருநங்கைகளுக்கும் இடம் உண்டு  என்பதை நிரூபித்தவர்,  தமிழக  முதல்வர்  தனக்களித்த  அங்கீகாரத்தை  திருநங்கை 

இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் பெண்!

கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால்  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதால், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில்,   ஆங்காங்கே, ஒரு சிலர் தாங்கள் இயக்கும் வாடகை கார்கள், ஆட்டோக்கள் மூலம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் மன்முன் சர்கார், கரோனாவால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 மணி நேரமும் தன்னுடைய இ-ரிக்ஷா மூலம் இலவச சேவை வழங்கி வருகிறார். வடக்கு வங்காளத்தின் சிலிகிரி நகரத்தைச் சேர்ந்த  முதல் பெண் இ-ரிக்ஷô ஓட்டுநரும்  இவரே. 


இதுகுறித்து பேசிய அவர், 
""கரோனா காலத்தில், "பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் சேவையை நம்பியிருக்க வேண்டிய சூழலில்,  அவை சரியான நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தொற்று பாதித்தவர்களிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர். இது எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது. இதனால், கரோனா பாதித்தவர்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வது என முடி வெடுத்தேன். இதுவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சேவை வழங்கியுள்ளேன். 

கரோனா நோயாளிகளை கையாள்வதற்கு பலரும் பயப்படும் நிலையில், உங்களுக்கு அந்த பயம் இல்லையா? என்று பலரும் கேட்கின்றனர்.  அவர்களிடம் நான் கூறுவது இதுதான்,   நான் இறந்த பிறகும், என்னை நினை


தமிழ் வம்சாவளிக்கு புலிட்சர் விருது!


அமெரிக்கப்  பத்திரிகையாளர்  ஜோசப்  புலிட்சர் பெயரால் ஆண்டுதோறும் வழங்கப்படும்  புலிட்சர்  விருதினை  கொலம்பியா  பல்கலைக்கழகத்தின் அமைப்பு  வழங்கி  வருகிறது.


சீனாவில்,  உய்குர்  முஸ்லிம்கள் அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசித்தபோதிலும் மதச் சிறுபான்மையானராகவே  அழைக்கப் படுகின்றனர்.  அவர்கள் முகாம்களில்  வைத்து சித்திரவதை  செய்யப்படுவதாக  மேகா  ராஜகோபாலன் ஆதாரங்களுடன்  செய்தி வெளியிட்டார்.  வெளி உலகம் அதிர்ந்தது.  இதன்  காரணமாக  சீனாவின்  ஜின்ஜியாங்  பகுதியிலிருந்து அவர்  வெளியேற்றப்பட்டார்.  இருந்தாலும் மேகா  ராஜகோபாலன்  உய்குர்  முஸ்லிம்கள்  குறித்து தொடர்ந்து   எழுதினார்.


இந்த துணிச்சலான செய்தி  வெளியீட்டுக்காக அவருக்கு  இந்த ஆண்டின்  புலிட்சர்  விருது வழங்கப்பட்டுள்ளது.

ராஷி கன்னாவின் சேவை


நடிகை ராஷி கன்னா,  கரோனா  பொதுமுடக்கத்தையொட்டி,  ஆதரவற்றவர்கள்,  நடைபாதை  வாசிகள்,  விலங்குகளுக்கு இலவச உணவு  அளித்து வருகிறார்.  இவரது  அமைப்பின் பெயர்:  'பீ த மிராக்கிள்'. இவரது  அமைப்பு 'ரொட்டி வங்கி' என்கிற  அமைப்புடன்  இணைந்து இந்தச் சேவையை  செய்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com