பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சேனைக்கிழங்கு  பட்டாணி சுண்டல் 

சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். கேரட் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். நறுக்கிய சேனை, பட்டாணியை தனித்தனியே நன்றாக  வேக வைக்கவும்.

News image
Updated On :15 மார்ச் 2021, 5:53 am

சுந்தரி காந்தி

தேவையானவை:

சேனைக் கிழங்கு  - 200 கிராம்
பட்டாணி - 100  கிராம்
கேரட்  -1
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1தேக்கரண்டி
உளுந்து -1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு -1  தேக்கரண்டி

செய்முறை: 

சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். கேரட் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். நறுக்கிய சேனை, பட்டாணியை தனித்தனியே நன்றாக  வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு, வேகவைத்த சேனைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து கிளறவும். பின்னர் கேரட் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.  இது நல்ல சத்தான  சுண்டல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.