
தமிழ்த் திரைப்பட உலகின் உள்ளேயும் வெளியேயும் நடிகை தேவயானிக்கென்று தனி இடம் இன்றும் உள்ளது.
முன்னணி நடிகையாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு, திரைப்படங்களுக்கு பிரியா விடை கொடுத்தார். பிறகு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து, சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கும் நீண்ட இடைவெளி கொடுத்தார்.
2003-இல் ஒளிபரப்பான "கோலங்கள்' சின்னத்திரை தொடரில் "அபிநயா' பாத்திரத்தின் மூலம் தேவயானி பிரபலமானார். 1500 எபிசோடுகளுடன் அந்தத் தொடர் 2009 வரை ஒளிபரப்பப்பட்டதால், தேவயானிக்கு வீடுகள் தோறும் ரசிகர்கள் பெருகியிருந்தனர். தேவயானியும் பிரபலமாக இருந்தார்.
பிறகு தேவயானி அவ்வப்போது சின்னத்திரையில் தலை காட்டினாலும், பெரிதாகப் பேசப்படவில்லை. 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேவயானி மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.. "ஜீ' தமிழ் சானலில் "புதுப்புது அர்த்தங்கள்' தொடரின் இரண்டாவது சீசனில் தேவயானி நடிக்கிறார். தேவயானிக்கு ஜோடி அபிபாஸ்கர். தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் ஒளிபரப்பாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.