கோடைக்கு இதம் தரும் பதநீர்!

வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணித்து உடனே  உடலைக் குளிர்விக்கும்  தன்மை பதநீரில் உள்ளது.
கோடைக்கு இதம் தரும் பதநீர்!

வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணித்து உடனே உடலைக் குளிர்விக்கும் தன்மை பதநீரில் உள்ளது.

உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும் பானம் இது. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பையும் குணப்படுத்தும்.

சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.

பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.

மலச்சிக்கலைத் தீர்க்கும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.

மஞ்சளைப் பொடித்து அரை தேக்கரண்டி 50 மில்லி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.

கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பல் சம்பந்தமான குறைபாடுகள் குணமாகும்.

குழந்தைகளின் எடையைக் கூட்டும் சக்தியான இரும்புச் சத்து, தயாமின், அஸ்கார்பிக் அமிலம், புரோட்டீன் ஆகிய சத்துகள் பதநீரில் அதிகம் உள்ளன. எனவே, தினமும் குறிப்பிட்ட அளவு பதநீரை காலையில் சாப்பிடும் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com