சின்னத்திரை மின்னல்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "அவளும் நானும்' தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை மௌனிகா.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "அவளும் நானும்' தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை மௌனிகா. தற்போது இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மகராசி' தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், மெளனிகாவிற்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த விழாவில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மௌனிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் "சுந்தரி'. இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடரின் நாயகி சுந்தரி கதாபாத்திரத்தில் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் நடித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த நடிகை நயன்தாராவின் "ஐரா' திரைப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர் கேப்ரியல்லா. "சுந்தரி' தொடரில் பிசியாக இருக்கும் இவர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து கேப்ரியல்லா கூறியதாவது, "நான் கனவில் கூட நினைத்து பார்க்காத நிஜம் நடந்தது. ரொம்ப நன்றி ஏ.ஆர்.ரஹ்மான் சார். இது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு' என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...