உலக சிலம்ப அமைப்பு (ரர்ழ்ப்க் ள்ண்ப்ஹம்க்ஷஹம் ச்ங்க்ங்ழ்ஹற்ண்ர்ய்) சார்பில் சமீபத்தில் மதுரையில் 4 மணி நேர தொடர் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், சென்னை, மதுரை, கோயம்பத்தூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000 பேர் கலந்து கொண்டனர். அதில் சுமார் 500 பேர், தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிலம்பப் பள்ளி மாணவர்கள் 9 பேர் கலந்து கொண்டு சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் யோகலட்சுமி மற்றும் கல்கி ஆகிய இருவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""கடலூர் மாவட்டம் புவனகிரி தான் எங்களது சொந்த ஊர். நாங்கள் இருவரும் கடந்த 5 வருடமாக சிலம்பம் கற்று வருகிறோம். அவ்வபோது, மாவட்ட ரீதியாக நடைபெறும் சிலம்ப போட்டிகளில் கலந்து கொள்வோம்.
அந்த வகையில் எங்களது மாஸ்டர் விக்னேஷ் உலக சிலம்பம் அமைப்பு சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
அதற்காக தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டோம். தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இடைவிடாது 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனையாளராக பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதன்"மூலம் வரும் காலங்களிலும் இதுபோன்று போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது

28.4.1976: சென்னை மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி

வாரிசு சான்று வழங்க ரூ.500 லஞ்சம் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


