பொட்டுக்கடலை ரவா லட்டு

பாதாம் பருப்பை பத்து நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து தோல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயைப் பொடி செய்ய வேண்டும். சர்க்கரையைப் பொடி செய்ய வேண்டும்.
பொட்டுக்கடலை ரவா லட்டு
Updated on
1 min read

தேவையானவை:

ரவை - 200 கிராம்
பொட்டுக்கடலை - 200 கிராம்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 50 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
ஏலக்காய் - 4
நெய் - 300 கிராம்

செய்முறை:

பாதாம் பருப்பை பத்து நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து தோல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயைப் பொடி செய்ய வேண்டும். சர்க்கரையைப் பொடி செய்ய வேண்டும். வாணலியில் ரவையை வறுத்து எடுக்க வேண்டும். பின்னர், முந்திரி, பாதாம் ஆகியவற்றைப் போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் ரவை, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி இவைகளை தனித்தனியாகப் பொடி செய்ய வேண்டும். சர்க்கரைப் பொடியுடன் ஏலக்காய்ப் பொடி கலந்து மற்றபொடிகளையும் போட்டு ஒன்றாகக் கலந்து சூடான நெய்யைவிட்டு உருண்டை உருண்டையாக லட்டு பிடிக்கவும். சுவையான பொட்டுக்கடலை லட்டு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com