புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ப்ரோக்கோலி உருளைக்கிழங்கு மசாலா

உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

News image
Updated On :30 நவம்பர் 2021, 6:30 pm

DIN


தேவையானவை :

உருளைக் கிழங்கு - கால் கிலோ
ப்ரோக்கோலி -100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் -1  மேசைக்கரண்டி
கரம் மசாலா  - அரை மேசைக்கரண்டி
கொத்துமல்லி  - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை  தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - அரை  தேக்கரண்டி 
கறிவேப்பிலை - 1 கொத்து 

செய்முறை : 

உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிவிட்டு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும், அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் அதனுடன் நறுக்கிய ப்ரோக்கோலியைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைத்து, கொத்துமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான ப்ரோக்கோலி உருளைக்கிழங்கு மசாலா தயார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.