லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தாம்பூல பையும் அதன் சிறப்பும்!

நவராத்திரியின் போது வழங்கும் தாம்பூல பையில் இருக்க வேண்டியவைகள்:

News image
Updated On :12 அக்டோபர் 2021, 6:30 pm

நவராத்திரியின் போது வழங்கும் தாம்பூல பையில் இருக்க வேண்டியவைகள்:

வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, ரவிக்கைத்துணி அல்லது புடவை.

இதில் வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.

மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.

சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்யும்.

கண்ணாடி, கணவனின் ஆரோக்கியத்தை காக்கும்.

வளையல், மன அமைதியை தரும்.

தேங்காய், பாவம் நீங்கும்.

பழம், அன்னதானப் பலன் கிடைக்கும்.

பூ, மகிழ்ச்சி பெருகும்.

மருதாணி, நோய் வராதிருக்க.

கண்மை, திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க.

தட்சணை , லட்சுமி கடாட்சம் பெருக.

ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் கிடைக்கும்.

தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள் என்பது நம்பிக்கை.

நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி அம்மன் யாருடைய ரூபத்திலாவது இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.