வீட்டை அலங்கரிக்க போறீங்களா...?

வீட்டின் உட்பகுதிகளை அலங்காரம் செய்வது என்பது ஒரு கலையாகும்.  அதில், வீட்டின் உட்புற அலங்காரம், மின் விளக்குகள், பர்னிச்சர் பொருள்கள் மற்றும் வீட்டின் சுவர்கள் போன்றவற்றைப் பொருத்து அமைகிறது.
வீட்டை அலங்கரிக்க போறீங்களா...?
Published on
Updated on
1 min read


வீட்டின் உட்பகுதிகளை அலங்காரம் செய்வது என்பது ஒரு கலையாகும்.  அதில், வீட்டின் உட்புற அலங்காரம், மின் விளக்குகள், பர்னிச்சர் பொருள்கள் மற்றும் வீட்டின் சுவர்கள் போன்றவற்றைப் பொருத்து அமைகிறது. ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு வீட்டிற்கான அலங்காரப் பொருள்களை வாங்க வேண்டும். வீட்டை அலங்காரம் செய்யும் போது ஏற்படும் பொதுவான தவறுகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்:

தரை விரிப்புகள்

பொதுவாக அறையின் நடுப் பகுதியில் விரிப்பதற்காக தரை விரிப்பை வாங்கும்போது, பெரிய தரை விரிப்பை வாங்குவது நல்லது. பர்னிச்சர் பொருள்களின் கால்கள் அதன் மீது இருப்பது நல்லது. எல்லா கால்களும் தரை விரிப்பின் மீது இல்லை என்றாலும், அவற்றின் முன்னங்கால்களாவது தரை விரிப்பின் மீது இருப்பது நல்லது. அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

வண்ணம் அடித்தல்

வீட்டிற்கு வண்ணம் அடிப்பதற்கு முன்பாக, வீட்டை அலங்காரம் செய்வதற்கான பொருள்கள் மற்றும் கலை அலங்காரப் பொருள்களை வாங்குவது நல்லது. பின் அந்த அலங்காரப் பொருள்களுக்குப் பொருத்தமான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும். அப்போது பார்க்க அழகாக இருக்கும்.

திரைச் சீலைகள்

தரை வரை தொடும் நீண்ட உயரமான திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அது வீட்டின் உயரத்தை அதிகரித்துக் காட்டும். உயரம் குறைந்த அல்லது தரைக்கு மேல் தொங்கும் திரைச் சீலைகளைத் தவிர்ப்பது நல்லது.

குறைவான தலையணைகள்

சோபாவில் ஏராளமான தலையணைகளை வைக்கக் கூடாது.  உட்காருவதற்கு வசதியான இடம் இருக்கும் வகையில் தலையணைகள் மற்றும் மெத்தைகளை சரி செய்வது நல்லது.

சரவிளக்குகளை குறைந்த உயரத்தில் தொங்கவிடுதல் பொதுவாக நாம் அழகான சரவிளக்குகளை வாங்கி அவற்றை மிக உயரத்தில் தொங்க விடுகிறோம். அது தவறு ஆகும். ஏனெனில் சரவிளக்குகளை மிக உயரத்தில் தொங்கவிடும்போது அதன் வெளிச்சம் வீட்டின் மேற்கூரையின் மீது மட்டுமே படும். மேலும் கலை நயமிக்க வேலைப்பாடுகளைச் செய்தாலும், நாம் எளிதாகப் பார்க்கும் உயரத்தில் இருக்க வேண்டும். இடத்திற்கு ஏற்ப உயரம் வேறுபடலாம்.

மின் விளக்குகள்

கூரையில் பொருத்தும் விளக்குகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் மற்ற விளக்குகள், எல்.இ.டி விளக்குகள் மற்றும் ஸ்கோன் விளக்குகள் போன்றவற்றையும் தேர்ந்தெடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com