
கோடை காலத்தில் முகத்திற்கு அளவுக்கு மீறிய மேக்கப் செய்து கொள்ளக் கூடாது. ஐ- லைனருக்கும் பதிலாக கண்மை உபயோகிக்கலாம்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலைமாவு, சிறிது தயிர், சிறிது இளநீர் சேர்த்துக் கலந்து சருமத்தில் தடவிவந்தால்வெயிலினால் ஏற்படும் கருமை மறைந்து சருமம் வெறுப்பாகும்.
ஐஸ் கட்டியினால் முகத்திற்கு ஒத்தடம் கொடுத்தால் முகம் கவர்ச்சிகரமாக இருக்கும். உஷ்ணம் காரணமாக ஏற்படக் கூடிய சரும பாதிப்புகள் இராது.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்ப் பவுடருடன் சிறிது மருதாணிப் பவுடர் பயத்தம்மாவு, வெந்தயப் பொடி, காய்ந்த எலுமிச்சைதோல் பவுடரும் கலந்து தலையை அலிசனால் உச்சந்தலை குளிர்ந்து சுகமாக இருக்கும்.
கோடையில் ஏற்படும் வெப்பத்தால் முகம் வறண்டு காணப்படும், இதைத் தடுக்க வாழைப்பழத்தை கூழ் போலப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தண்ணீர் இரண்டு சொட்டு கிளிசரின் கலந்து பரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கூழை முகத்தில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்துவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் வறண்ட தன்மை நீங்கி முகம் வசீகரமாக இருக்கும்.
கோடையில் தர்பூசணிப் பழத்தின் சதைப் பகுதியை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து சோப் போடாமல் குளிர்ந்த நீரில் கழுவினால் கறுந்திட்டுகள் மறைந்துவிடும்.
எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி மிஷினில் அரைத்து ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கரைக்க வேண்டும். அந்தக் கலவையை உடம்பு முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். இந்த கலவை குளியல் வெயிலில் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
ஒரு சோற்றுக் கற்றாழை தாளின் ஜெல்லுடன் கிரீமாகும் அளவுக்கு வெள்ளரி விதை பவுடரை கலந்து கொள்ள வேண்டும். வெயிலில் போய்விட்டு வந்த பிறகு இந்த கிரீமை பூசி பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இது வெயிலினால் ஏற்படும் பருக்கள் கட்டிகளிலிருந்து முகத்தைப் பாதுகாக்கும். முகத்தில் கருமையும் படியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.