பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பலாப்பழ பாயசம்

முதலில் பலாப்பழத்தை குக்கரில் போட்டு, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :12 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தேவையானவை

கனிந்த பலாப்பழ துண்டுகள் - 12
வெல்லம் -  அரை கிண்ணம்
தண்ணீர் - கால் கிண்ணம்
கெட்டியான தேங்காய்ப் பால் - முக்கால் கிண்ணம்
நெய் - 3  தேக்கரண்டி
முந்திரி - சிறிது
தேங்காய் துண்டுகள் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:  

முதலில் பலாப்பழத்தை குக்கரில் போட்டு, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.  அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த வாணலியில் வெல்ல நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.  பாயசம் ஓரளவு கெட்டியானதும் அதில் மீதமுள்ள நெய் மற்றும் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒருமுறை கிளறி இறக்கி விட வேண்டும். இறுதியாக அதில் வறுத்த முந்திரி, தேங்காய்த் துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயசம் தயார்.

குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் தேங்காய்ப் பால் பாதியும், காய்ச்சியப் பால் பாதியையும் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்ததும் கொதிக்க வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் பாயசம் திரிய ஆரம்பித்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.